• Apr 28 2024

நடிகை லட்சுமி மேனனுடன் புதிய படத்தில் கமிட்டான பிக் பாஸ் பிரபலம்! வைரலாகும் போட்டோஸ்

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் பிக்பாஸ் சீசன் 4இல் கலந்து கொண்டு டைட்டிலை வென்றவர் தான் ஆரி அர்ஜுனன். 

இவர் சக போட்டியாளர்கள் எல்லோரிடமும் கண்டிப்பாக இருந்தாலும் வெளியே இவருக்கு பெரிய நல்ல பெயர் இருந்தது. 

பிக்பாஸ் போட்டியாளர்களின் குடும்பத்தினர் கூட இவரை பார்த்த போது நன்றாக விளையாடுகின்றீர்கள் தம்பி என்று பாராட்டும் அளவிற்கு இவரின் ஆட்டம் அந்த சீசனில் மிகவும் சிறப்பாக இருந்தது.


பிக்பாஸை தொடர்ந்து ஆரி சினிமாவில் பெரிய ரவுண்டு வருவார் என்று ரசிகர்கள் பலராலும் எதிர்பார்க்கப்பட்டது.

அதன்படி, தற்போது நல்ல படங்களாக தெரிந்து எடுத்து, ஒரு சில படங்களில் நடித்து வருகிறார் ஆரி.


ஆரி அர்ஜுன், சேரன் நடிப்பில் வெளியான திரைப்படம் அண்மையில் தான் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில், தற்போது நடிகை லட்சுமி மேனனுடன் புதிய படத்தில் நடிப்பதற்கு கமிட்டாகி உள்ளார் ஆரி அர்ஜுன்.

தற்போது இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைராகி வருகிறது.




Advertisement

Advertisement

Advertisement