• May 07 2024

கோலிவுட்டில் ஹீரோவாக என்ட்ரியாகும் பிக்பாஸ் விஷ்ணு விஜய்! இங்கிலீஷ் பேப்பரில் ஹெட் லைன்ஸ் என்ன தெரியுமா?

Aathira / 4 weeks ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் தமிழ்7 போட்டியாளர்களில் நடிகர் விஷ்ணு விஜய்யும் ஒருவர். அவரது தொழில், வாழ்க்கை முதல் அவரது தனிப்பட்ட வாழ்க்கை, அவர் பட்ட அவமானங்கள் என எல்லாவற்றையும் தாண்டி இன்று சாதித்துள்ளார்.

நடிகர் விஷ்ணு விஜய் தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சயமான நடிகர்களில் ஒருவர் . திரைப்படங்களாக இருந்தாலும் சரி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளாக இருந்தாலும் சரி, விஷ்ணு தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு சிறந்த முத்திரையைப் பதித்தவர்.

விஷ்ணு விஜய், ஹேமலதா, மோனிஷா ரவிசங்கர் , யுதன் பாலாஜி மற்றும் இர்ஃபான் ஆகியோருடன் நடித்த பிரபலமான தமிழ் சீரியல் தான் 'கனா காணும் காலங்கள் கல்லூரியின் கதை' . இதன் மூலம் தனது வாழ்க்கையைத் தொடங்கினார் . 

ஆனால், ‘ஆபிஸ்’ சீரியலில் நடித்த விஷ்ணுவின் கதாபாத்திரம் அவருக்கு தமிழில் பெரிய பிரேக் கொடுத்தது. அந்த சீரியலில் அவரது அழகான ஹீரோ அவதாரங்கள் பல மில்லியன் இதயங்களைக் கொள்ளையடித்தன. சத்யா சீசன் 1, 2, இது சொல்ல மறந்த கதை , அலுவலகம் போன்ற சீரியல்களில் அவரது நடிப்பு பாராட்டப்பட்டது.


மேலும், நடிகர்கள் விமல் , அஞ்சலி மற்றும் சூரி ஆகியோருடன் 'மாப்ள சிங்கம்' படத்தின் மூலம் தனது திரையுலக வாழ்க்கையைத் தொடங்கினார் . இவன் யாரென்று தெரிகிறதா, 6 அதியாயம், களரி, கொரில்லா, சிவப்பு செவல் ஆகிய படங்களில் நடித்ததன் மூலம் வெள்ளித்திரையில் ரசிகர்களை கவர்ந்தார்.

அதன் பின்னர், சமையல் ரியாலிட்டி ஷோ கிச்சன் சூப்பர் ஸ்டார்ஸ் சீசன் 3 இல் ஒரு போட்டியாளராக பங்கேற்றார், அங்கும் அவர் பிரபலமடைந்தார். அடுத்து பிக் பாஸ் சீசன் 7இல் பங்கு பற்றி இறுதி வரை சென்று இருந்தார்.


இந்த நிலையில், பிக் பாஸ் சீசன் 7 போட்டியாளரும் நடிகருமான விஷ்ணு விஜய், தெலுங்கு படத்தின் தமிழ் ரீமேக்கில் ஹீரோவாக என்ட்ரி ஆகியுள்ளார்.

அதாவது, தெலுங்கு படமான 'சி லா சௌ' படத்தின் தமிழ் ரீமேக்கில் விஷ்ணு விஜய் நடித்து வருகிறார். தற்போது தான் இதற்கான ஆரம்பகட்ட வேலைகள் நடக்கின்றனவாம்.

மேலும், கோலிவுட்டில் அறிமுகமாகும் விஷ்ணு விஜய் நடிக்கும் படத்திற்கு யார் ஹீரோயின் என இன்னும் தெரிவு செய்யவில்லை. ஆனாலும் அவர் தனக்கேற்ற ஸ்கிரிப்ட்களை தேர்வு செய்து திரைப்படங்களில் நடிக்க தன்னை தயார் செய்து வருவதாகவும் குறிப்பிட்டு உள்ளார்.

இதேவேளை, இந்த செய்தி ஆங்கில பத்திரிக்கை ஒன்றில் வெளியானதை தொடர்ந்து அதனை தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷார் பண்ணியுள்ளார் விஷ்ணு.



 

Advertisement

Advertisement

Advertisement