• May 08 2024

முதல் முறையாக தனது மகளின் புகைப்படத்தை பதிவிட்ட பாவம் கணேசன் சீரியல் நடிகர் நவீன்- குவியும் வாழ்த்துக்கள்

stella / 1 year ago

Advertisement

Listen News!

கலக்கப் போவது யாரு நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் அதிகம் பிரபலம் ஆனவர் தான் நவீன். இதனைத் தொடர்ந்து பல நிகழ்ச்சிகளில் பங்குபற்றி வந்த இவர் அண்மையில் முடிவடைந்த பாவம் கணேசன் சீரியலிலும் நாயகனாக நடித்து வந்தார்.

இந்நிலையில்,  இவருக்கு ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தான நிலையில், இரண்டாவதாக கிருஷ்ணகுமாரி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முதல் ஒரு பெண் குழந்தையும் பிறந்தது.


இது தொடர்பாக, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகளுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து உருக்கமான சில கருத்துக்களையும் நவீன் குறிப்பிட்டுள்ளார். "இரு நெஞ்சம் இணைந்து பேசிட உலகில் பாஷைகள் எதுவும் தேவையில்லை ❤️. என் பெருமைமிகு மகளை வரவேற்கிறேன். அவள் பிறந்து ஒரு வாரம் ஆகிறது, என்னை ஒரு தந்தையாக உணர வைத்துள்ளார். எப்போதும் நெகிழ வேண்டிய சிறந்த உணர்வு. ஆனால், அதே வேளையில் அவளை பார்த்து கொள்வது அவ்வளவு எளிதல்ல. ஒரு பெரும் போராட்டத்திற்கு பிறகு, தாயும் மகளும் நன்றாக இருக்கிறார்கள்.


எனது மனைவியும், மகளும் ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுக்காமல் என்னை பெருமைமிகு தந்தையாக மாற்றி உள்ளார்கள்" என நவீன் குறிப்பிட்டுள்ளார். மேலும், தனது மனைவியை டேக் செய்து நன்றி தெரிவித்துள்ள நவீன், அப்பா என நீ அழைப்பதற்காகவே என் அடுத்த காத்திருப்பு என்றும் உருக்கமாகவும் மகளை பற்றி குறிப்பிட்டுள்ளார். இவரின் இந்த பதிவிக்கு பவரும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement