• Apr 01 2023

கண்ணம்மாவை ஓங்கி அறைந்த பாரதி- கடைசியில் காத்திருந்த அதிர்ச்சி- பரபரப்பான பாரதி கண்ணம்மா ப்ரோமோ

stella / 1 month ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டு ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் சூப்பர் ஹிட் சீரியல் தான் பாரதி கண்ணம்மா சீசன் 2. சிப்பு சூரியன் மற்றும் வினுஜா தேவி ஆகியோர் கதாநாயகன் கதாநாயகியாக நடித்து வருகின்றனர். இந்த சீரியலுக்கும் ரசிகர்களிடம் இருந்து நல்ல வரவேற்புப் கிடைத்து வருகின்றது. 

அதாவது கண்ணம்மாவுக்கும் பாரதியை யார் என்று தெரியாது அதே போல பாரதிக்கும் கண்ணம்மாவை யாரென்று தெரியாது. இருவரும் பார்த்த முதல் நாளிலிருந்து முட்டி மோதிக் கொண்டே வருகின்றனர். இறுதியாக பாரதி விஜய்யை வைத்து பிளான் போட்டு கண்ணம்மாவுக்கு திருடிப்பட்டம் கட்டி அசிங்கப்படுத்தி விட்டார்.

இதனால் கோபமடைந்த கண்ணம்மா பாரதியின் ஜுப் இருக்கையில் கம் பூசியுள்ளார். இதனை கவனிக்காத பாரதி ஜுப்பில் இருந்து இறங்கும் போது அவரது முதுகு பக்கம் சேட் கிழிந்து விடுகின்றது. இதனால் பாரதி பொண்ணு பார்க்கப் போன இடத்தில் அசிங்கப்பட்டு விடுகின்றார்.

இதனால் கோபமடைந்த பாரதி கண்ணம்மாவை அடித்து விட அவர் உனக்கெல்லாம் பாரதி தான் சரி என்று போன் செய்கின்றார்.உடனே பாரதி போன் பண்றது நீயா, நான் தான் பாரதி என கண்ணம்மாவுக்கு அதிர்ச்சி கொடுக்கின்றார். இது குறித்த ப்ரோமோ தான் வெளியாகியுள்ளதைக் காணலாம்.


Advertisement

Advertisement

Advertisement