• Jun 03 2023

நெருப்பில் எரிந்த வெண்பா... மருத்துவர்கள் கூறிய அதிர்ச்சித் தகவல்... பார்க்க முடியாது முகத்தைத் திருப்பிய பாரதி... வெளிவந்த வீடியோ..!

Prema / 1 week ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் 'பாரதி கண்ணம்மா 2'. முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து தான் இதன் 2-ஆம் பாகம் ஆரம்பமாகி ஒளிபரப்பாகி வருகின்றது. ஆனால் முதல் பாகத்தைப் போன்று எதிர்பார்த்தளவிற்கு 2-ஆம் பாகம் வெற்றி பெறவில்லை என்று தான் கூற வேண்டும்.


இந்நிலையில் தற்போது ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகி இருக்கின்றது. அதில் நெருப்பில் எரிந்த வெண்பாவை ஹாஸ்ப்பிட்டலிற்கு கொண்டு செல்கின்றனர். அங்கு மருத்துவர்கள் வெண்பாவின் உடையில் தீப் பிடித்ததால் காயம் ரொம்ப ஆழமாக இருக்கின்றது, ஒரு பக்க முகமே எரிஞ்சிடிச்சு எனக் கூறுகின்றனர். 


அதனைக் கேட்டதும் சௌந்தர்யா அதிர்ச்சி அடைகின்றார். பின்னர் வெண்பாவின் முகத்தைப் பார்த்த பாரதி பார்க்க முடியாமல் முகத்தை மூடிக் கொள்கின்றார். ஒட்டு மொத்த குடும்பமும் வெண்பாவின் முகத்தைப் பார்த்து அதிர்ச்சி அடைகின்றனர்.

போன் கமெராவில் தன்னுடைய முகத்தைப் பார்த்த அதிர்ச்சி அடைந்து அழுகின்றார். இவ்வாறாக இந்தப் ப்ரோமோ வீடியோ வெளிவந்துள்ளது. 

 

Advertisement

Advertisement

Advertisement