• May 03 2024

“நான் படிக்காதவன் என்பதாலே…” சர்ச்சைக்கு விளக்கம் சொன்ன சூரி!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

சமீபத்தில் கார்த்தி அதிதி சங்கர் நடிப்பில் வெளியாக உள்ள விருமன் படத்தின் டீசர் வெளியீட்டு விழா மிகப்பிரமாண்டமான முறையில் நடைபெற்றது. இந்த விழாவில் சூர்யா, ஷங்கர், சூரி, யுவன் சங்கர் ராஜா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டுள்ளனர். இசை வெளியீட்டு விழாவின் போது நடிகர் சூரி பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

மேடையில் பேசிய நடிகர், அறக்கட்டளையை குறிப்பிட்டு அவர் பேசுகையில் ஆயிரம் கோயில்கள் அன்னச்சத்திரங்கள் கட்டுவதை விட ஒருவனுக்கு கல்வி கொடுப்பது பல ஜென்மம் பேசும் எனக் சொன்னார். சூரியின் இந்த கருத்து பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக பல இந்து அமைப்பினர் கண்டனம் தெரிவித்து வந்தனர்.

ஏன் கோவிலை பற்றிய எல்லோரும் பேசுகிறார்கள். மசூதி, சர்ச் பற்றி பேச தைரியம் இல்லையா என பலரும் கேள்வி எழுப்பினர். யார் இப்போது கோவிலை கட்டுகிறார்கள்? எல்லோமே அரசர்கள் கட்டிய கோவில்தான். தமிழகத்தில் இருக்கிற இவையெல்லாம் கடந்த 1000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டவை என்ற கருத்து முன்வைக்கப்பட்டன. ஏற்கனவே ஜோதியா இது போன்ற கருத்தை கூறி சர்ச்சையில் சிக்கி இருந்தார். எனினும் தற்போது சூரியின் கருத்து பேசும் பொருளாக இடம்பெற்றது.

மேலும் இது குறித்து வீடியோ வெளியிட்டு இருந்த பயில்வான் ரங்கநாதன் இந்து கோவில்களும் கல்வி அறக்கட்டளையும் ஒன்றாக இணைத்து பேசும் சூரி ஏன் கிறிஸ்தவர்களின் சர்ச், இஸ்லாமியர்களின் மசூதி போன்றவற்றை பற்றி பேசவில்லை.

அன்ன சத்திர ஆயிரம் கட்டுவதை விட எனக் கூறியிருக்கிறார் சூரி..ஆனால் ஜெயலலிதாவின் ஆட்சியில் இருந்து இப்போது வரை பலருக்கும் அவரது திட்டம் தான் உணவளித்து வருகின்றது. மேலும் இது சூரிக்கு தெரியாதா? அவர் இப்போது ஒரு ஹோட்டலை வைத்து நடத்தி வருகின்றார். ஆனால் ஒரு காலத்தில் ஒருவேளை சாப்பாட்டுக்கு கூட அவர் கஷ்டப்பட்டவர் தான். எதனால் இன்றைக்கு அன்ன சத்திரம் கட்டுவதும் கோவில் கட்டுவதும் அவருக்கு ஒரு தவறாக தெரியவில்லையா ஏன் இப்படி பேச வேண்டும் நீங்களும் ஒரு இந்து தானே என சரமாரியாக கேள்வி எழுப்பி இருந்தார்.

இந்நிலையில் இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் விருமன் புரமோஷன் விழாவில் பேசிய சூரி, "மதுரையில் நடைபெற்ற இசை வெளியீட்டு விழாவில் ஆயிரம் கோவில்கள் கட்டுவதை விட ஏழைகளுக்கு ஒரு கல்வி கொடுப்பது சிறப்பானது என்று கூறி இருந்தேன்.

நான் அதை யார் மனதையும் புண்படுத்த வேண்டும் என்று கூறவில்லை. கோவில்களுக்கு எதிரானவன் நான் இல்லை நான் சாமி கும்பிடுபவன் தான். மதுரை மீனாட்சி அம்மனோடு தீவிர பக்தன். அதனால் தான் என்னுடைய ஹோட்டல்கள் அனைத்திற்கும் அம்மன் பெயரையே வைத்திருக்கிறேன். அப்படி இருக்கையில் நான் எப்படி கோவில்களை பற்றி தவறாக பேசுவேன்.

அன்றைக்கு கல்வியை ஒரு சிறப்பான விஷயம் என்று சொல்வதற்காக தான் அப்படிப் பேசினேன். ஆனால் அதை சிலர் தவறாக புரிந்து கொண்டுள்ளனர். யாரும் என்னை தவறாக நினைக்க வேண்டாம் நான் எந்த கோவில்களுக்கும் எதிரானவன் அல்ல நான் படிக்காதவன் என்பதாலே நிறைய இடங்களில் எனது கருத்து தவறாக புரிந்து கொள்ளப்படுவதால் மனசு உடைந்து போகிறேன். அதனால் எல்லோரும் நல்லா படிக்கணும் இதை நான் சொல்லவில்லை. அன்று கல்வியின் உள்நோக்கத்தை உணர்ந்த மகாகவி பாரதியார் சொன்னார் அதைத்தான் நானும் சொன்னேன். என்னை தவறாக நினைக்காதீர்கள். நானும் சாமி கும்பிடுகிறவன் தான் நான் இப்பவும் சொல்றேன் அனைவருக்கும் கல்வி வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement