• May 04 2024

"துணிவு படத்தின் பேங்காக் நாட்கள்"- அமீர் மற்றும் பாவனியைத் தொடர்ந்து அஜித்துடன் நிற்கும் மாஸ்டர் பட பிரபலம்

stella / 1 year ago

Advertisement

Listen News!

வலிமைக்கு பின் நடிகர் அஜித்குமார்- எச்.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணையும் படம் தான் துணிவு. இப்படத்தின் இரண்டு பெஸ்ட்லுக் போஸ்டர்கள் அண்மையில் தான் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்திருந்தது.இப்படத்தின் படப்பிடிப்பானது ஐதராபாத், சென்னை & விசாகப்பட்டினத்தில் நடந்தது.


தற்பொழுது இறுதிக்கட்டப்படப்பிடிப்பானது  தாய்லாந்து நாட்டின் பேங்காக் நகரில் கடந்த செப்டம்பர் மாதம் முதல் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. படத்தில் கதாநாயகியாக மஞ்சுவாரியார் நடித்து வருகின்றார்.சார்பட்டா பரம்பரை படத்தில் வேம்புலி கதாபாத்திரத்தில் நடித்த ஜான் கொக்கெனும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்கள்.


இவர்களைத் தவிர அண்மையில் இந்தப் படப்பிடிப்பில் காதல் ஜோடிகளான அமீர் மற்றும் பாவனி கலந்து கொண்டனர்.இந்நிலையில் பேங்காக் நகரில் நடிகர் அஜித் குமார் உடன் மாஸ்டர் பட நடிகர் சிபி புவன சந்திரன் எடுத்து கொண்ட புகைப்படங்களை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

 "துணிவு படத்தின் பேங்காக் நாட்கள்" என தலைப்பிட்டு புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.இவரைத் தவிர அமீர் மற்றும் பாவனியும் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் தற்பொழுது வைரலாகி வருவதைக் காணலாம்.


Advertisement

Advertisement

Advertisement