• Jan 29 2025

இத பார்த்தா பப்லு ரொம்ப பீல் பண்ணுவாரே.! ஷீத்தல் வெளியிட்ட ரொமாண்டிக் போட்டோஸ்..

Aathira / 1 day ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான பப்லு அதன்பின்பு ஹீரோ, வில்லன், குணசித்திர கதாபாத்திரம் என பல கேரக்டர்களிலும் நடித்துள்ளார். இவர் இறுதியாக அனிமல் படத்தில் வில்லனாக மிரட்டி இருப்பார். இந்த படம் கிட்டத்தட்ட 1000 கோடிகளை கடந்து வசூலில் சாதனை படைத்திருந்தது.

56 வயதாகும் பப்லு ஏற்கனவே திருமணமாகி ஒரு மகன் இருக்கும் நிலையில் இரண்டாவதாக மலேசியாவை சேர்ந்த ஷீத்தல் என்ற பெண்ணை காதலித்து அவருடன் லிவிங் டு ரிலேஷன்ஷிப்பில் இருந்தார். அந்தப் பெண்ணுக்கு அவருடைய மகனின் வயது தான் ஆகின்றது. இதனால் பல விமர்சனங்களுக்கு உள்ளானார்.

d_i_a

எனினும் பிறரின் விமர்சனங்களை காதில் வாங்காமல் பப்லு ஷீத்தலுடன் மிகவும் சந்தோஷமாக லிவிங் டு ரிலேஷன் ஷிப்பில் வாழ்ந்து வந்தார். ஆனால் ஒரு கட்டத்தில் இவர்களுக்கு இடையே மனக்கசப்பு ஏற்பட்டு இருவரும் பிரிந்து விட்டனர். அதற்குரிய காரணம் எதுவும் அவர்கள் தெரிவிக்கவில்லை.


இதைத்தொடர்ந்து சமீபத்தில் ஷீத்தல் திடீரென தனது திருமண புகைப்படத்தை வெளியிட்டார். இது பலருக்கு அதிர்ச்சியை கொடுத்தாலும் ஷீத்தலின் இந்த முடிவுக்கு தங்களது வாழ்த்துக்களை பலரும் தெரிவித்தனர். ஷீத்தல் திருமணம் முடித்தவர் ஜிம்மில் பயிற்சியாளராக காணப்படுவதோடு அவர் ஒரு ஒரு தடகள வீரர் ஆவார்.

இந்த நிலையில், ஷீத்தல் தனது கணவருடன் இருக்கும் புதிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். தற்போது குறித்த புகைப்படங்கள் வைரலாகி வருவதோடு ரசிகர்கள் கமெண்டில் பப்லுவை வைத்து கலாய்த்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement