• May 29 2023

ஆறு வருடங்களுக்கு முதலே விற்கப்பட்ட அயலான் திரைப்படம்- பலகோடி நஷ்டத்தால் குழப்பத்தில் இருக்கும் படக்குழு

stella / 1 month ago

Advertisement

Listen News!

இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள மாவீரன் திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது.அதன்பிறகு ஆர். ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் தயாராகியிருக்கும் திரைப்படம் அயலான் எப்போது ரிலிஸ் ஆகும் என ரசிகர்கள் காத்திருந்தனர். இந்நிலையில் இப்படம் குறித்து அதாவது படத்தின் ரிலீஸ் தேதி குறித்து ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்தது.

தீபாவளி ஸ்பெஷலாக படம் வெளியாக இருப்பதாக தெரிவித்தனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க இதில் சிவகார்த்திகேயன் ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார்.


இப்படத்தை தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் என 5 மொழிகளில் ரிலீஸ் செய்ய இருக்கிறார்களாம்.இப்படத்தின் சாட்டிலைட் உரிமை மிகவும் கம்மியான விலைக்கு விற்கப்பட்டுள்ளதாம்.


காரணம் இப்படம் அறிவிக்கும் போதே அதாவது 2017ம் ஆண்டே சன் தொலைக்காட்சிக்கு விற்றுவிட்டாராம் தயாரிப்பாளர். இப்போது மட்டும் விற்றிலிருந்தால் அதிக தொகைக்கு கொடுத்திருக்கலாம் என்கின்றனர். அதனால் படக்குழு சோகத்தில் இருக்கின்றனர் என்றும் கூறப்படகின்றது.

Advertisement

Advertisement

Advertisement