• Mar 28 2024

கடவுள் மீது நம்பிக்கை இல்லாத கமல்ஹாசன் பெயர் மட்டும் அப்படி வைப்பது நியாயமா?- புட்டு புட்டு வைத்த பிரபலம்

stella / 11 months ago

Advertisement

Listen News!


நடிகர் கமல்ஹாசன் தன்னை பகுத்தறிவுவாதியாக வெளிகாட்டிக்கொள்பவர் என்பதை தமிழக மக்கள் பலரும் அறிவார்கள். அவரது திரைப்படங்களிலேயே அவரது பகுத்தறிவு கருத்துகளை வெளிப்படுத்தும் வகையில் பல வசனங்கள் இடம்பெற்றிருக்கும். உதாரணத்திற்கு, “தசாவதாரம்” திரைப்படத்தில் இடம்பெற்ற புகழ்பெற்ற வசனமான, “கடவுள் இல்லைன்னு நான் எங்க சொன்னேன். கடவுள் இருந்தா நல்லா இருக்கும்ன்னுதானே சொன்னேன்” என்ற வசனத்தை கூறலாம்.

கமல்ஹாசனின் பகுத்தறிவு சிந்தனைகளை பலர் புகழ்ந்தாலும், இந்த சிந்தனையால் பலர் தங்களது எதிர்ப்புகளை தெரிவிப்பதும் உண்டு. கமல்ஹாசன் திரைப்படங்கள் வெளிவரும் போதெல்லாம் பல சர்ச்சைகள் வெடிப்பது வழக்கமாகவே இருக்கும்.


இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட காமெடி நடிகர் மீசை ராஜேந்திரன், கமல்ஹாசன் குறித்து இதுவரை யாரும் அறியாத தகவல் ஒன்றை கூறியுள்ளார்.அதாவது கமல்ஹாசன் ஒரு நடன பள்ளியை நடத்தினாராம். 


அந்த நடனப்பள்ளிக்கு “சிவாலயா” என்று பெயர் வைத்திருந்தாராம். மேலும் தனது இளம்வயதில் தேவாலயத்தில் கீ போர்டு பிளேயராகவும் இருந்தாராம் கமல்ஹாசன். இவ்வாறு தனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை என்று கூறும் கமல்ஹாசன், தனது நடன பள்ளிக்கு “சிவாலயா” என்று பெயர் வைத்திருக்கிறார் என்று அப்பேட்டியில் பகிர்ந்துகொண்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement