• May 05 2024

சீனாவில் மாஸ் காட்டும் அவதார் - தி வேய் ஆப் வாட்டர்..கொண்டாடும் ரசிகர்கள்

lathushan / 1 year ago

Advertisement

Listen News!

உலக சினிமா ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து இருக்கும் பிரம்மாண்ட திரைப்படம் அவதார்.  இப்படத்தின் இரண்டாம் பாகமான அவதார் 2 திரைப்படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது. 


அதுமட்டுமல்லாமல் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் கடந்த 2009ம் ஆண்டு வெளியான படம் தான் அவதார். உலகம் முழுவதும் வசூல் சாதனை செய்துள்ள இந்த படத்தை ரசிகர்கள் கொண்டாடினார்கள்.

இரண்டாம் பாகம் அவதார்-தி வே ஆஃப் வாட்டர் என்ற பெயரில் உருவாகி உள்ளது. இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என இந்திய மொழிகள் உட்பட 160 மொழிகளில் உருவாகியுள்ளது.


அவதார் அதுவரை சீனாவில் வெளியான அனைத்து ஹாலிவுட் மற்றும் பிறநாட்டுப் படங்களின் வசூலை முறியடித்தது. 2014 ட்ரான்ஸ்பார்மாஸ் - ஏஜ் ஆஃப் எக்ஸ்டிங்டன் வெளியாகும்வரை அவதார் முதலிடத்தில் தொடர்ந்தது. பிறகு பல படங்கள் அவதார் வசூலைத் தாண்டின. சீன பாக்ஸ் ஆபிஸில் அதிகம் வசூலித்த ஹாலிவுட் திரைப்படங்களில் அவதார் தற்போது எட்டாவது இடத்தில் உள்ளது.


அவதார் இரண்டாம் பாகம் சீனாவில் 15 மில்லியன் டாலர்களை கடந்து வசூலித்துள்ளது. இந்த வார இறுதியில் 119 முதல் 128 மில்லியன் டாலர்களை வசூலிக்க வாய்ப்புள்ளதாக கணித்துள்ளனர்.


Advertisement

Advertisement

Advertisement