• May 04 2024

அட்ராசக்க - சிவகார்த்திகேயனின் மாவீரன் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிச்சாச்சு- எப்போது தெரியுமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

சிவகார்த்திகேயன் கோலிவுட்டின் டாப் 10 ஹீரோக்களில் ஒருவராக இருக்கிறார். கேரியரை ஸ்டார்ட் செய்தபோது சில படங்களிலேயே காணாமல் போய்விடுவார் என கருதப்பட்ட அவர் தொடர்ந்து தனது திறமைகளை வளர்த்து நூறு கோடி வசூலிக்கும் ஹீரோவாக உயர்ந்து நிற்கிறார். விஜய்க்கு எப்படி சிறுவர்கள், சிறுமிகள் ரசிகர்களாக இருக்கின்றனரோ அதேபோல் சிவகார்த்திகேயனுக்கும் இருக்கின்றனர். 

தற்பொழுது  மடோன் அஸ்வின் இயக்கத்தில் மாவீரன் படத்தில் நடித்துவருகிறார்.அந்தப் படத்தில் யோகி பாபு நடித்திருந்தார். படம் மெகா ஹிட்டாகி தேசிய விருதையும் வென்றது. இதனால் மாவீரன் படத்தின் மீதான எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது.


படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகின்றது. ஆனால் படம் எப்போது ரிலீஸாகும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாமல் இருந்தது. இந்நிலையில் அதுகுறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியிருக்கிறது. அதன்படி படமானது ஆகஸ்ட் 11ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என கூறப்பட்டிருக்கிறது.

இதற்கிடையே மாவீரன் படத்தில் கமல் ஹாசன் வாய்ஸ் கொடுக்கவிருப்பதாகவும் அதற்கான பேச்சுவார்த்தை போய்க்கொண்டிருப்பதாகவும் ஒரு தகவல் சமீபத்தில் வெளியானது.மாவீரன் படத்துக்கு பிறகு ரங்கூன் படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் புதிய நடிக்கவிருக்கிறார் சிவகார்த்திகேயன். 


இந்தப் படத்தை கமல் ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது. விரைவில் தொடங்கவிருக்கும் இப்படத்தின் ஷூட்டிங் காஷ்மீர் உள்ளிட்ட படங்களில் நடக்கவிருப்பது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement