• Apr 28 2024

ப்ளு சட்டை மாறனை கையெடுத்து கும்பிட்ட அசோக் செல்வன்... 'போர் தொழில்' படத்திற்கு என்ன விமர்சனம் சொல்லியிருக்காரு பாருங்க..!

Jo / 10 months ago

Advertisement

Listen News!

தமிழ் உள்ளிட்ட மற்ற மொழி படங்கள் குறித்தும் விமர்சனம் செய்து வருபவர் ப்ளு சட்டை மாறன். ஒரு படம் வெளியானதும் அதை பார்க்கலாமா வேண்டாமா என இவரின் விமர்சனம் பார்த்து முடிவு செய்ய பெரிய ரசிகர்கள் கூட்டமே உருவாகியுள்ளது.

இவரது விமர்சனங்களுக்கு ரசிகர்களிடம் வரவேற்பு இருந்தாலும் திரையுலகில் பலரும் ப்ளு சட்டை மாறன் மீது கடுப்பில் தான் உள்ளனர்.

இந்நிலையில் அசோக் செல்வன் அவருக்கு நன்றி தெரிவித்துள்ளார். போர் தொழில் படத்துக்கு ப்ளு சட்டை மாறன் செய்த விமர்சனத்தை தனது டிவிட்டரில் ஷேர் செய்துள்ள அசோக் செல்வன், அவருக்கு நன்றி கூறியுள்ளார். மேலும் கையெடுத்து கும்பிடும் எமோஜியையும் அதில் குறிப்பிட்டுள்ளார். இதனை ரீ-டிவிட் செய்துள்ள ப்ளு சட்டை மாறன், இன்னும் சிறந்த கேரக்டரில் நடிக்க வேண்டும் என வாழ்த்தியுள்ளார்.

கடந்த வாரம் 9ம் தேதி அசோக் செல்வன், சரத்குமார், நிகிலா விமல் உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் போர் தொழில் படம் வெளியானது. விக்னேஷ் ராஜா இயக்கத்தில் க்ரைம் திரில்லர் ஜானரில் உருவாகியுள்ள போர் தொழில் மாஸ் காட்டி வருகிறது. 

இப்படத்திற்கு ப்ளு சட்டை மாறன் 100 சதவீதம் பாசிட்டிவான விமர்சனம் செய்திருந்தார். அதோடு மொத்த படக்குழுவினரையும் பாராட்டித் தள்ளியிருந்தார்.போர் தொழில் படம் ரசிகர்களுக்கு புதுமையான அனுபவத்தை கொடுத்துள்ளதாகவும், திரைக்கதையும் வசனமும் படத்தின் முதல் காட்சியில் இருந்தே எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது எனக் கூறியிருந்தார். முக்கியமாக சரத்குமார், அசோக்செல்வன் இருவரது நடிப்பும் போர் தொழில் படத்திற்கு பெரிய பாசிட்டிவ் எனவும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

அதேபோல், படத்தில் ஒரு காட்சி கூட தேவையில்லாதது கிடையாது எனவும் பாராட்டியிருந்தார். இதற்காக தான் அசோக் செல்வன் ப்ளு சட்டை மாறனுக்கு நன்றி தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement