• May 18 2024

"அசீம் என்ன பெரிய ரவுடியா..?.. நான் வரேன்.. அப்ப தெரியும்.." ராபர்ட்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி ஒளிபரப்பாகி விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது.இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில், யூடியூபர் ஜி.பி.முத்து, இசைக் கலைஞரான அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், மாடல் ஷெரினா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் சிங்கரான ஆர்யன் தினேஷ் (ADK), மாடல் ஷெரினா, தொகுப்பாளினி ஜனனி,  KPY அமுதவாணன், VJ மகேஸ்வரி, VJ கதிரவன், சத்யா சீரியல் நடிகை ஆயிஷா, ஈரோடு டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, நடிகை ரச்சிதா மகாலட்சுமி, ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரான மணிகண்டன் ராஜேஷ், மெட்டி ஒலி ஷாந்தி அரவிந்த், VJ விக்ரமன், மாடல் குயின்சி ஸ்டான்லி, சிங்கப்பூர் மாடல் நிவாஷினி,நந்தினி உள்ளிட்ட 21 நபர்கள் கலந்து கொண்டனர்.

இவ்வாறு இருக்கையில் ஜிபி முத்து, சாந்தி,அசல் கோலார்,ஷெரினா என பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறி இருந்தார்கள்.இந்நிலையில் பிக்பாஸ் வீட்டுக்குள் ஃபேக்டரி டாஸ்க் நடக்கிறது. 


இதில் ‘கண்ணா லட்டு திண்ண ஆசையா?’, ‘அடை தேனடை’ என இருவகை கம்பெனிகளாக பிரிந்து பிக்பாஸ் ஹவுஸ்மேட்ஸ் இனிப்பு கடைகளை வைத்திருக்கின்றனர். மேலும் இவற்றுக்கான தயாரிப்பு பண்டங்களை வீட்டுக்குள் அனுப்பும்போது போட்டியாளர்கள் முந்தியடித்துக்கொண்டு என்று கலெக்ட் செய்துகொண்டு வருகின்றனர்.

மேலும் இதில் போட்டியாளர்கள் சிலர் இரண்டு கம்பெனிகளிலும் சேருவதற்கு விண்ணப்பிக்கலாம். இதில் அசீம் இருக்கும் கம்பெனியில் அசீம்க்கு பதில் தன்னை வேலைக்கு எடுத்துக்கொள்ள சொல்லி ராபர்ட் பேசியது வைரலாகியுள்ளது.


அதன்படி, “ஒரு கடையில் அனைவரும் ஹேப்பியாக இருக்கின்றனர். இன்னொரு கடையை கிராஸ் பண்ணி போனால், டமால் டுமீல் என வெடிக்கிறது, சரி என்ன என காதை கொடுத்து கேட்டால், அசீம், அசீம் என கூறுகிறார்கள். அவர் என்ன அவ்வளவு பெரிய ரவுடியா? எனக்கு புரியல ? என் கோரிக்கை அவர் இடத்துக்கு அந்த கம்பெனிக்கு நான் வரவேண்டும் என்பதுதான், அப்போது தான் யாரு ரவுடி.. யாரு லோலாயி என தெரியும்” என்று ராபர்ட் மாஸ்டர் கூறினார்.


இதை கேட்டதும் கூடியிருந்த அனைவருமே, ‘வர்லாம்.. வர்லாம்.. வாங்க மாஸ்டர்’ என கைத்தட்டி ஆரவாரம் செய்தனர். அசீமுமே ராபர்ட் மாஸ்டரின் இந்த பேச்சை ரசித்து சிரித்து கேட்டுக்கொண்டிருந்தார்.


Advertisement

Advertisement