• May 02 2024

சூட்டிங் பிஸியிலும் முக்கிய ஸ்தலங்களுக்குச் சென்ற அசீம்- வெளியாகிய லேட்டஸ்ட் கிளிக்ஸ்- குவியும் லைக்குகள்

stella / 11 months ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் சின்னத்திரையை சேர்ந்த பிரபலங்கள் கலந்து கொள்வதன் முக்கிய காரணமே, வெள்ளித்திரையில் கால் பதிக்க வேண்டும் என்பதற்காக தான். அந்த கனவு சிலருக்கு நிஜமானாலும், பலருக்கு ஏனோ சரியான வாய்ப்புகள் அமைவதில்லை. 

அந்த வகையில் அண்மையில் முடிவடைந்த பிக்பாஸ் சீசன் 6 போட்டியில் கலந்து கொண்ட முக்கிய போட்டியாளர்களின் ஒருவர் அசீம்.பிக் பாஸ் வீட்டிற்குள் வந்த நாளிலிருந்து, இவர் சண்டை போடாத நாளும்... பிரச்சனை செய்யாத நாளும் இல்லை என்று கூறலாம். 


சண்டை போட்டால் தான் பிக் பாஸ் ப்ரோவில் இடம் பெற முடியும் என்பதை நோக்கமாக வைத்து இவர் சண்டை போடுவதாகவும் இவரை பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என சிலர் கொந்தளித்தனர்.


அதேநேரம் மற்றொரு தரப்பினர், பிக் பாஸ் வீட்டிற்குள் அசீம் இருப்பதால்தான் இந்த நிகழ்ச்சியை ஏதோ பரபரப்பாக போய் கொண்டிருக்கிறது என அவருக்கு ஆதரவு தெரிவித்து வந்தனர்.இதன் காரணமாக அசீம் டைட்டில் வின்னராகவும், அறம் வெல்லும் விக்ரமன் இரண்டாவது இடத்தையும் பிடித்தார்


பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் அசீமை தேடி சில வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன.இந்த நிலையில் அசீம் பிரபல பள்ளிவாசலுக்குச் சென்று தொழுகையில் ஈடுபட்டுள்ளார். இது குறித்த புகைப்படம் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்து வருவதைக் காணலாம்.

Advertisement

Advertisement

Advertisement