• Apr 26 2024

பலத்த அடி வாங்கும் ஆர்யா... என்ன சார் படுமோசமாய் இருக்கே... வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமா ரசிகர்களால் அதிகளவில் கொண்டாடப்படும் ஒரு சிறந்த பிரபலமே நடிகர் ஆர்யா. திரையுலக அறிமுக காலத்தில் இருந்து இன்றுவரை திறம்பட தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தக் கூடிய ஒரு நடிகராக விளங்கி வருகின்றார். இதுவரை இவர் நடித்த படங்கள் ஏராளம். அதில் சில படங்கள் தோற்றாலும் நிறைய படங்கள் செம ஹிட்டடித்து வருகின்றன.

அந்தவகையில் கொரோனாவிற்கு பின்பு இவரது நடிப்பில் வெளியான 'சார்பட்டா பரம்பரை, டெடி' போன்ற படங்கள் எல்லாம் ஹிட் படங்களாகவே அமைந்திருக்கின்றன. இதனால் தொடர்ந்தும் பின்வாங்காமல் பல படங்களில் நடித்து தன்னுடைய ரசிகர்கள் பட்டாளத்தையும் அதிகரித்த வண்ணமே இருக்கின்றார்.


அந்தவகையில் 'டெடி' திரைப்படத்திற்கு பிறகு சக்தி செளந்தர்ராஜன் - ஆர்யா கூட்டணியில் உருவாகியிள்ள த்ரில்லிங் படம் 'கேப்டன்'. இந்தப் படத்தின் தயாரிப்பாளராகவும், நடிகராகவும் ஆர்யா இருக்கின்றார். மேலும் அவருடன் இணைந்து சிம்ரன், ஐஸ்வர்யா லட்சுமி, ஹரிஷ் உத்தமன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். 


இந்தப் படத்தில் இவர்கள் அனைவரும் இந்திய ராணுவத்தில் பணியாற்றுகின்றனர். அதாவது இந்தியாவின் வடக்கிழக்கு பகுதியில் மூன்று நாடுகள் எல்லையில் இருக்கும் காட்டுப் பகுதியில் மக்கள் நடமாட்டம் இல்லை. அந்த பகுதிக்கு செல்லும் ராணுவ வீரர்கள் மர்மமான முறையில் சுட்டு கொல்லப்படுகிறார்கள்.


அங்கு என்ன நடந்தது? ராணுவ வீரர்களை யார் கொன்றார்கள் என்று ராணுவத்திற்கு தெரியவில்லை. இந்த நிலையில் அந்தக் குறித்த காட்டுப் பகுதிக்கு ஆர்யா தலைமையிலான ஐந்து பேர் கொண்ட குழு செல்கிறது. அதன் பின் என்ன நடக்கிறது என்பதை மையமாக கொண்டே 'கேட்பன்' படத்தின் கதை அமைந்திருக்கின்றது. 


இவ்வாறாக சௌந்தரராஜன் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் தயாராகி இருந்த இந்த 'கேப்டன்' திரைப்படம் ஆனது நேற்று முன்தினம் வெளியாகி இருந்தது. படம் சொல்லும் படியாக அவ்வளவிற்கு இல்லை என்பதால் விமர்சனத்திலும் ரசிகர்களிடம் நல்ல அடி வாங்கியது.


விமர்சனத்தைப் போன்றே படத்தின் வசூலும் செல்லும் படியாக இல்லை. அதாவது முதல் நாள் முடிவில் படம் ரூ. 1 முதல் ரூ. 1.5 கோடி வரை தான் வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.


இந்நிலையில் தற்போது இரண்டாம் நாள் வசூலும் வெளியாகி இருக்கின்றது. அந்தவகையில் இப்படமானது வெறும் 1.75 வரை மட்டுமே வசூல் செய்திருக்கின்றது. இதனைத் தொடர்ந்து நெட்டிசன்கள் பலரும் வசூலில் ஆர்யா விழுந்து விட்டதாகவும், பலத்த அடி வாங்குவதாகவும் கிண்டலாக கூறி வருகின்றனர். 

Advertisement

Advertisement

Advertisement