• May 02 2024

கிராமத்து கெட் அப்பில் முரட்டுத்தனமாக அமர்ந்திருக்கும் ஆர்யா- டைட்டிலுடன் வெளியான ஃபர்ஸ்ட் லுக்

stella / 1 year ago

Advertisement

Listen News!

கடந்த 2013 ஆம் ஆண்டு சசிகுமார் நடிப்பில் வெளியாகிய திரைப்படம் தான் குட்டிப்புலி. இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாகியவர் தான் முத்தையா. இதனைத் தொடர்ந்து கார்த்தி நடிப்பில் வெளியாகியிருந்த கொம்பன் படத்தை இயக்கினார்.

தொடர்ந்து விஷாலை வைத்து 'மருது'படத்தையும் மீண்டும் கார்த்தி நடிப்பில் இந்த ஆண்டு வெளியாகியிருந்த விருமன் படத்தையும் இயக்கியிருந்தார். இதில் இறுதியாக வெளியாகிய விருமன் திரைப்படம் ரசிகர்களிடையே சூப்பர் ஹிட் வெற்றியும் பெற்றிருந்தது. 

இந்த நிலையில்  இயக்குநர் முத்தையா அடுத்து நடிகர் ஆர்யாவுடன் புதிய படத்தில் இணைந்துள்ளார்.இந்த படத்தில் சிதி இத்னானி கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.இவர் இயக்கும் படங்கள் அனைத்திலும், கிராமம் சார்ந்த கதைக் களம் தான் இடம்பெற்றிருக்கும். 


 ஆர்யா, தற்போது முத்தையாவுடன் கைகோர்த்திருப்பதால் ரசிகர்களிடையே ஆவல் அதிகரித்திருக்கிறது. மேலும் இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்யுஇந்த நிலையில், ஆர்யா - முத்தையா கூட்டணியில் உருவாகி படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது அதிகாரபூர்வமாக வெளியாகி உள்ளது.

"காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்" என இந்த படத்திற்கு தலைப்பு வைக்கப்பட்டுள்ள நிலையில், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் நாற்காலி ஒன்றில் கருப்பு சட்டை மற்றும் கருப்பு லுங்கி அணிந்தபடி, கிராமத்து பின்னணி கொண்ட கதாபாத்திரத்திலும் ஆர்யா ஆவேசமாக இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement