• May 04 2024

ஆர்யா-சாயிஷாவின் மகளா இது.. மளமளவென்று வளர்ந்து.. பார்ப்பதற்கு யாரை மாதிரி இருக்கார் பாருங்க..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகராகத் திகழ்ந்து வருபவர் நடிகர் ஆர்யா. அதேபோல் தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநர்களில் ஒருவரான ஏ.எல்.விஜய் இயக்கிய 'வனமகன்' என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் சாயிஷா. இவர் சினிமாவில் நுழைந்து மிக குறுகிய நாட்களிலேயே, தன்னுடைய நடிப்பாலும், அழகாலும், மற்றும் நடன அசைவுகளாலும் ரசிகர்களை அதிகம் கவர்ந்தார்.


மேலும் 'வனமகன்' படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து, நடிகர் கார்த்திக்கு ஜோடியாக 'கடைக்குட்டிசிங்கம்', விஜய் சேதுபதிக்கு ஜோடியாக 'ஜூங்கா', சூர்யாவுக்கு ஜோடியாக  'காப்பான்', என தொடர்ந்து முன்னணி நடிகர்கள் பலருக்கு ஜோடியாக அடுத்தடுத்த படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது


அத்தோடு ஆர்யாவுடன் இணைந்து 'கஜினிகாந்த்' படத்தில் நடித்த போது, ஆர்யா - சாயிஷா இடையே காதல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து இவர்கள் இருவரும் கடந்த 2019ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்கள்.


மேலும் இவர்களுக்கு கடந்த 2021ஆம் ஆண்டு அழகிய பெண் குழந்தை ஒன்று பிறந்தது. தங்களுடைய மகளுக்கு Ariana என பெயர் சூட்டியுள்ளனர்.குழந்தை பிறந்து கிட்டத்தட்ட ஓராண்டுங்களுக்கும் மேல் ஆன நிலையிலும் தங்களுடைய மகளை ரசிகர்களுக்கு அறிமுகம் செய்து வைக்காமல் இருந்து வந்த இவர்கள் ஆர்யாவின் பிறந்த தினத்தன்று மகளின் புகைப்படம் ஒன்றினை முதன்முதலாக வெளியிட்டிருந்தனர்.


இதனைத் தொடர்ந்து தற்போது சாயிஷா தனது மகள் அரியனாவுடன் எடுத்துக்கொண்ட சமீபத்திய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தை பார்த்த பலரும், அச்சு அசல் அம்மாவை உரித்து வைத்தது போல் இருக்கிறாரே ஐரா என கூறி தமது கமெண்டுகளை பதிவு செய்து வருகிறார்கள்.

இதோ அந்த புகைப்படம்..!


Advertisement

Advertisement

Advertisement