• May 02 2024

புதிய படத்தின் அப்டேட்டை வெளியிட்ட ஆர்யா.. ப்பா மாஸாக இருக்கே.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

முத்தையா இயக்கத்திலும் ஆர்யா நடிப்பிலும் தற்போது 'காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்' என்ற படம் உருவாகி வருகின்றது.  இந்த படத்தின் படப்பிடிப்புக்கள் யாவும் ஆரம்பமாகி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்ற இந்த நேரத்தில் இப்படத்தின் டீசர் மார்ச் 31ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் இப்படமானது ஆர்யாவின் திரை வாழ்க்கையில் முக்கிய ஒரு திருப்புமுனை கொடுக்கும் என்று ரசிகர்கள் பலராலும் எதிர்பார்க்கப்படுகிறது. இதில் ஆர்யாவிற்கு ஜோடியாக சித்தி இதானி நடிக்கின்றார். மேலும் ஜிவி பிரகாஷ்குமார் இசையமைக்க வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கின்றார். 


அதுமட்டுமல்லாது இந்த படத்தை டிரம்ஸ்டிக் புரடொக்சன்ஸ் மற்றும் ஜீ ஸ்டூடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்து வருகின்றது. இந்த நிலையில் தற்போது 'காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்' படத்தின் செம மாஸ் ஸ்டில்லை ஆர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு டீசர் 31ஆம் திகதி வெளியாகும் என அறிவித்துள்ளார் இப்பதிவினை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.


அத்தோடு இந்த ஸ்டில் ஆனது ரொம்ப மாஸாக இருப்பதாகவும் தமது கமெண்டுகளை பதிவிட்டு வருவதோடு, இப்படத்தின் வெளியீட்டை எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement