• May 05 2024

தந்தைக்கு வாழ்த்து தெரிவித்த அருண் விஜய்... அதுவும் எப்படித் தெரியுமா.?

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அருண் விஜய். இவர் 1995 இல் வெளியான 'முறை மாப்பிள்ளை' என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக காலடி எடுத்து வைத்தார். அதனைத் தொடர்ந்து 'மலை மலை, தடையறத் தாக்க, இயற்கை, மாஞ்சா வேலு' உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கின்றார்.


மேலும் அருண் விஜய் ஒரு வாரிசு நடிகர் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒரு விடயம். அதாவது நடிகர் விஜயகுமாரின் மகனே அருண் விஜய். விஜயகுமார் பல படங்களிலும் குணச்சித்திர வேடங்கள், மற்றும் கௌரவத் தோற்றங்களில் கலக்கி வருகின்ற ஒருவர். அதுமட்டுமல்லாது ஒரு சில ஹிந்தி மற்றும் தெலுங்கு மொழித் திரைப்படங்களிலும் நடித்திருக்கின்றார்.


விஜயகுமாரின் திரையுலக வாழ்க்கையில் இவர் கிட்டத்தட்ட 400 இற்கும் அதிகமான படங்களில் நடித்திருக்கின்றார். இதுவரை அருண் விஜய்யும் அவரது தந்தையும் நான்கு முறை ஒன்றாக இணைந்து நடித்து திரையில் தோன்றினர். அதாவது 'பாண்டவர் பூமி, மலாய் மலாய், மஞ்சா வேலு மற்றும் குற்றம் 23' ஆகிய படங்களில் நடித்துள்ளனர்.


இந்நிலையில் நடிகர் விஜயகுமார் இன்றைய தினம் தன்னுடைய பிறந்த நாளைக் கொண்டாடுகின்றார். இதற்கு சாதாரண மக்கள் முதல் திரைப்பிரபலங்கள் வரை பலரும் தமது வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணமே இருக்கின்றனர்.


அந்த வகையில் மகனான அருண் விஜய்யும் தனது தந்தைக்கு க்யூட்டான புகைப்படங்களின் மூலமாக பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்திருக்கின்றார்.

Advertisement

Advertisement

Advertisement