• Jun 01 2024

நடிகர் கார்த்தியை வைத்து படம் இயக்கும் அருண்ராஜா..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

நடிகர், பாடலாசிரியர், பாடகர் என பன்முக திறமை கொண்டவர் தான் அருண்ராஜா காமராஜ்.

மேலும் இவர் “கனா” படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அவரின் நண்பரான நடிகர் சிவகார்த்திகேயன் இந்தப்படத்தை தயாரித்திருந்தார்.

ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ் நடிப்பில் வெளியான இந்த படம் பெண்கள் கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து உருவாகி இருந்தது.

மேலும் அப்படத்தை தொடர்ந்து இரண்டாவதாக அவர் இயக்கத்தில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் நெஞ்சுக்கு நீதி. நேற்று வெளியான இப்படம் சிறந்த விமர்சனங்களை பெற்று மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இதனிடையே இரண்டு அடுத்தடுத்த வெற்றியை தொடர்ந்து இயக்குனர் அருண்ராஜா நடிகர் கார்த்தி படத்தை இயக்க தயாராகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அத்தோடு பான் இந்தியா படமாக உருவாகவுள்ள அப்படத்தின் ஷூட்டிங் முழுக்க முழுக்க தென்னாபிரிக்காவில் நடக்கும் கதையாக உருவாக உள்ளதாக தகவல் வந்துள்ளது.

Advertisement

Advertisement