• Apr 07 2026

அருண் மாதேஸ்வரன் விலகவில்லை.. – இளையராஜா பயோபிக் வதந்திக்கு தனுஷ் மேலாளர் முற்றுப்புள்ளி.!

shali / 1 month ago

Advertisement

Listen News!

இசை உலகின் அடையாளமாக திகழும் இசைஞானி இளையராஜா அவர்களின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு உருவாகும் திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியான நாளிலிருந்தே ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக, இந்த வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிகர் தனுஷ் இளையராஜாவாக நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது சினிமா வட்டாரத்தில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.


இந்த படத்தை  ‘கேப்டன் மில்லர்’ படத்தை இயக்கிய இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால், தரமான திரைக்கதை மற்றும் உணர்வுபூர்வமான காட்சிகளுடன் இந்த பயோபிக் உருவாகும் என்ற நம்பிக்கை ரசிகர்களிடையே வலுவடைந்தது.

இந்த நிலையில், சமீப நாட்களாக சமூக வலைத்தளங்களில் ஒரு தகவல் வேகமாக பரவி வந்தது. அதாவது, இளையராஜா வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் இருந்து இயக்குநர் அருண் மாதேஸ்வரன் விலகிவிட்டார் என்ற செய்தி தான் அது. இந்த தகவல் வெளியாகியதும், ரசிகர்களிடையே குழப்பமும் கவலையும் உருவானது.

இந்நிலையில், இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், நடிகர் தனுஷின் மேலாளர் அதிகாரபூர்வ விளக்கத்தை வெளியிட்டுள்ளார்.அவர் தனது பதிவில், “நடிகர் தனுஷ் நடிக்கும் இளையராஜா வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் இருந்து இயக்குநர் அருண் மாதேஸ்வரன் விலகிவிட்டதாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் செய்திகள் முற்றிலும் உண்மையல்ல.”என்று தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும்,“லோகேஷ் கனகராஜின் ‘டிசி’ திரைப்படம் வெளியான பிறகு, திட்டமிட்டபடி இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இந்த பெரிதும் எதிர்பார்க்கப்படும் வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் பணிகளைத் தொடங்குவார்.”எனத் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement