• Sep 27 2023

தமிழுடன் மீண்டும் ஒன்று சேர்ந்த அர்ஜுன் மற்றும் ராகினி- கோதை மன்னித்து விட்டாரா?- வைரலாகும் வீடியோ

stella / 1 week ago

Advertisement

Listen News!

விஜய் டிவியின் முக்கிய சீரியல்களில் ஒன்றாக இருக்கிறது தமிழும் சரஸ்வதியும் தொடர். இதில் தீபக் மற்றும் நக்ஷத்திரா ஆகியோர் ஹீரோ,ஹீரோயினாக நடித்து வருகின்றனர்.

குடும்ப பிரச்சனையால் தமிழ் மற்றும் சரஸ்வதி வீட்டை விட்டு வெளியேறி தனியாக கம்பெனி தொடங்கி முன்னுக்கு வர ஆரம்பித்து விட்டனர். இது ஒரு புறம் இருக்க அர்ஜுன் பற்றிய உண்மைகள் அனைத்தும் கோதைக்கு தெரிந்து விட்டது.


இதனால் தற்பொழுது  வீட்டை விட்டு வெளியேறி தமிழ் வீட்டில் வசித்து வருகின்றார். இதனால் அர்ஜுனிடம் இருந்து எப்படி சொத்துக்களை மீட்கப்போகின்றார் ராகினிக்கு உண்மை எல்லாம் தெரிய வருமா என்ற எதிர்பார்ப்பு மட்டுமே ரசிகர்களிடம் அதிகமாக உள்ளது.

இப்படியான நிலையில் தமிழ் அர்ஜுன் மற்றும் ராகினி, கோதை ,சரஸ்வதி, நமச்சி என எல்லோருடனும் சேர்ந்து கோவிலில் நடனமாடும் வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவைப் பார்த்த பலரும்  மீண்டும் எப்போது இப்படி இணைந்து சந்தோஷமாக இருக்கப்போறீங்க என்று கேட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement