• Sep 26 2023

கணவனின் இழப்பிலிருந்து மீண்டு வர காட்டுக்குச் சென்ற பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை- தேற்றி வரும் ரசிகர்கள்

stella / 1 week ago

Advertisement

Listen News!

சின்னத்திரையில் நாதஸ்வரம் சீரியல் மூலம் அறிமுகமான ஸ்ருதி, அடுத்தடுத்து வாணி ராணி, கல்யாண பரிசு, பாரதி கண்ணம்மா போன்ற சீரியலில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.

நடிப்பின் மீது இருந்த ஆர்வத்தினால் கல்லூரி படிக்கும்போதே நடிப்பிற்கு வந்த இவர், வெள்ளித்திரையிலும் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.இவர் கடந்த ஆண்டு மிஸ்டர் தமிழ்நாடு 2022 என்ற போட்டியில் கலந்து கொண்டு இரண்டாவது பரிசை வென்ற அரவிந்த் சேகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.


இவர்களின் திருமணம் இருவீட்டாரின் சம்மதத்துடன் அரங்கேறியுள்ள நிலையில், திருமணத்திற்கு பின்பு சீரியலிலிருந்து விலகி குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்தி வந்தார்.சந்தோஷமாக இவர்கள் வாழ்ந்து வர திடீரென மாரடைப்பு ஏற்பட்டு அரவிந்த் சேகர் உயிரிழந்துவிட்டார்.

கணவரின் உடல் மட்டும் தான் இல்லை ஆனால் அவரது ஆத்மா என்னுடன் தான் உள்ளது என கூறி வந்த ஸ்ருதி அந்த பெரிய இழப்பில் இருந்து வெளியே வர இயற்கையின் துணையை தேடியிருக்கிறார்.

அவர் அண்மையில் காட்டுக்குள் சென்றுள்ள அவர் அங்கு எடுக்கும்  புகைப்படங்கள் மற்றும் வீடியோவை தனது இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார்.இந்த வீடியோவைப் பார்த்த பலரும் ஸ்ருதிக்கு தமது ஆறுதலைத் தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement