• Nov 29 2022

கெட்ட வார்த்தையில் திட்டிய போட்டியாளர்கள்..மகேஷ்வரி மைனாக்கிடையில் நடந்த வாக்குவாதம்...நடந்தது என்ன..?

Listen News!
Aishu / 2 weeks ago
image
Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி ஒளிபரப்பாகி 31வது நாளை கடந்துள்ளது.இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில், யூடியூபர் ஜி.பி.முத்து, இசைக் கலைஞரான அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், மாடல் ஷெரினா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் சிங்கரான ஆர்யன் தினேஷ் (ADK), மாடல் ஷெரினா, தொகுப்பாளினி ஜனனி,  KPY அமுதவாணன், VJ மகேஸ்வரி, VJ கதிரவன், சத்யா சீரியல் நடிகை ஆயிஷா, ஈரோடு டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, நடிகை ரச்சிதா மகாலட்சுமி, ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரான மணிகண்டன் ராஜேஷ், மெட்டி ஒலி ஷாந்தி அரவிந்த், VJ விக்ரமன், மாடல் குயின்சி ஸ்டான்லி, சிங்கப்பூர் மாடல் நிவாஷினி,நந்தினி உள்ளிட்ட 21 நபர்கள் கலந்து கொண்டனர்.

இவ்வாறு இருக்கையில் ஜிபி முத்து, சாந்தி,அசல் கோலார்,ஷெரினா என பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறி இருந்தார்கள்.இந்நிலையில் 31வது எபிசோட்டில் என்ன நடந்தது என்பதை பார்ப்போம்...

பிக்பாஸ் வீட்டுக்குள் ஃபேக்டரி டாஸ்க் நடக்கிறது. மேலும் இதில் இருவகை அணிகளாக பிரிந்து பிக்பாஸ் ஹவுஸ்மேட்ஸ் கடைகளை வைத்திருக்கின்றனர். இந்த இனிப்பு பொருட்களுக்கான அட்டைகளை வீட்டுக்குள் அனுப்பும்போது போட்டியாளர்கள் முந்தியடித்துக்கொண்டு என்று கலெக்ட் செய்துகொண்டு வருகின்றனர். இதில்தான், தனலட்சுமி - மணிகண்டன் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட, இறுதியில் அந்த பொருட்கள் மணிகண்டன் கையில் வந்துவிடுகின்றன.இதில், தனலட்சுமி மிகவும் ஆவேசமாக தன்னை தள்ளிவிட்டு தன் கையில் இருந்து பிடுங்கி மணிகண்டன் பொருட்கள் எடுத்துக் கொண்டதாக சொல்கிறார். இந்த பேச்சில் தனலட்சுமி மரியாதைக் குறைவாகப் பேசுவதாய் சொன்ன மணிகண்டன்,    “உன் வயது என்ன? என்னை எப்படி ‘டா’ என்று சொல்கிறாய்?” என்று இன்னும் கொதிக்கிறார். அதன்பின்னரும் இவர்களுடைய சண்டை பிக் பாஸ் வீட்டுக்குள் தொடர்கிறது. 

அத்தோடு தனலட்சுமி சொல்வது போல், அவரை தள்ளிவிட்டு அவர் கையில் இருந்து பிடுங்கி பொருட்களை எடுத்துக் கொள்ளவில்லை என்று ஆவேசமாக மணிகண்டன் பதில் சொல்ல, இதை யாரெல்லாம் பார்த்தீர்கள் என்று தனலட்சுமி சாட்சிக்கு மற்ற ஹவுஸ் மேட்ஸை கேட்கிறார். அத்தோடு  இவர்களின் வாக்குவாதம் இப்படி இந்த வீட்டில் தொடர்கிறது.மேலும்  இறுதியில் நீ எப்படி வேண்டுமானாலும் எடுத்துக்க என்று ஆவேசமாக தனலட்சுமி கூறினார்.அதனை அசீம் நான் சொன்ன தப்பை நீங்க பண்ணாதீங்க என அசீம் சொல்கின்றார்.


இவ்வாறுஇருக்கையில்  சண்டைக்கு பின்னர் பல மணித்துளிகளுக்கு பின்னர் தனலெட்சுமி அழும் போது, "முதலாளி அழக்கூடாது முதலாளி" என மைனா ஜாலியாக தனலெட்சுமியை கலாய்க்கிறார். மேலும் "என் வீட்டுக் கன்னுக்குட்டி" பாடலையும் மைனா பாடுகிறார். இச்சூழலில் மணிகண்டன் எழுந்து தனலெட்சுமி நோக்கி நடந்து சென்று தனலெட்சுமியை 'சிஸ்டர்' என கூறி சமாதானம் செய்கிறார். இதை பார்த்த ஹவுஸ்மேட்ஸ் கைதட்டி நெகிழ்ந்தனர்.

இதன் பின்னர் மைனா விக்கரமனிற்கு அட்வைஸ் கொடுக்கின்றார்.ஒழுங்கா விளையாடுங்க.அந்த நிலையில் ரட்சிதா கீழே விழுந்ததை யாரும் கவனிக்கவில்லை.அதன் பிறகு மகேஸ்வரிக்கும் மைனாவிற்கும் கொஞ்சம் வாக்குவாதம் நடைபெற்றது.பின்னர் அவர்கள் இருண்டு பேரும் எமோஷ்னல் ஆக கட்டிப்பிடித்து சமாதானம் ஆகின்றனர்.இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகின்றது.