• Apr 27 2024

லியோ ஷுட்டிங் ஸ்பாட்டில் விஜய்யும் த்ரிஷாவும் இல்லையா?- கௌதம் மேனன் பேர்ட்டே கிளிக்ஸ்ல மிஸ் ஆகிட்டாங்களே

stella / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் விஜய், த்ரிஷா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து உருவாகிவரும் படம் லியோ. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பானது  கடுமையான குளிருக்கிடையில் காஷ்மீரில் ஸ்ரீநகரில் நடைபெற்று வருகிறது.இதில் 60 நாட்கள் சூட்டிங் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

 தினந்தோறும் காலை 10 மணி முதல் 5 மணி வரை சூட்டிங் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது.படத்தின் சூட்டிங் துவங்கியவுடனே காஷ்மீரிலிருந்து சென்னை திரும்பினார் த்ரிஷா. இதனால் பல்வேறு யூகங்களுக்கு இடம் ஏற்பட்டது. தொடர்ந்து காஷ்மீரின் குளிர் தாங்காமல் அவர் சென்னை திரும்பியதாக கூறப்பட்டது.


 இந்நிலையில் படத்தின் சூட்டிங்கை முடித்துள்ள இயக்குநர் மிஷ்கினும் கடுமையான குளிர் உள்ளதை தன்னுடைய அறிக்கையில் சுட்டிக் காட்டினார்.

இதனிடையே, விஜய் மற்றும் த்ரிஷா இருவரும் கடந்த சில தினங்களாக, காஷ்மீரிலிருந்து பிரேக் எடுத்துக் கொண்டு சென்னை வந்ததாகவும், தற்போது மீண்டும் காஷ்மீர் சூட்டிங்கில் அவர்கள் பங்கேற்பதற்காக சென்றுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இதனால்தான் சமீபத்தில் கௌதம் மேனன் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் அவர்கள் இடம்பெறவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. தன்னுடைய சண்டை காட்சிகள், 500 ஸ்டண்ட் கலைஞர்களைக் கொண்டு நடத்தப்பட்டதாக படத்தின் சூட்டிங்கை முடித்த மிஷ்கின் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது



Advertisement

Advertisement

Advertisement