• Mar 28 2023

பிரசித்தி பெற்ற பிரபலத்தை பார்த்து சுண்டைக்காய் பயல் என்று கூறிய மன்சூர் அலிகான்... ஏன் இந்த வேண்டாத வேலை..?

ammu / 1 month ago

Advertisement

Listen News!

நடிகர் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் பட்டத்துடன் வலம் வருபவர். இவர் சராசரியாக பல ஆண்டுகளை கடந்தும் ஒரு உச்ச நட்சத்திரமாக இன்று வரை கோலாகலமாக பேசப்பட்டு வருகிறார். இவர் முதல் முதலாக ‘அபூர்வ ராகங்கள்’ என்ற படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் கே.பாலசந்தர் இவரை அறிமுகப்படுத்தினார்.


அவ்வாறு தொடங்கிய இவர் அதன் பின் வில்லன், துணை நடிகர், இரண்டாம் நாயகன், நடிகர், சூப்பர் ஸ்டார்  என இன்று உலகமே போற்றும் வகையில் வளர்ச்சியடைந்து நிற்கிறார். இன்றைய இளம் தலைமுறையினருக்கு போட்டியாக வணிக ரீதியிலும் சரி விமர்சன ரீதியிலும் சரி முன்னிலையில் இருக்கிறார்.


நான்கு தசாப்தங்களாக சினிமாவை தன் நடிப்பில் ஆண்டு வரும் ரஜினிகாந்தை பற்றி பிரபல நடிகர் மன்சூர் அலிகான் அளித்த பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இயல்பாகவே மன்சூர் அலிகான் தமிழ் நாட்டிற்காகவும் தமிழக மக்களின் நலனுக்காகவும் குரல் கொடுப்பவர்.


யாரையும் பார்க்க மாட்டார். சரமாரியாக தனது மனதில் இருப்பதை, தனது கருத்துக்களை வெளிப்படையாக கூறுபவர். இந்த நிலையில் ஒரு பத்திரிக்கை நிரூபர் ரஜினியின் புகைப்படத்தை காட்டி அவரை பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டதற்கு ‘ ரஜினி ஒரு நல்ல நடிகர் அவ்ளோதான், ஆனால் ஏழைகளின் பக்கம் நிற்க மாட்டார், பெரும்பாலும் அனைவருமே தன் குடும்ப நலனையே முதலில் பார்ப்பார்கள், அதே மாதிரி தான் இவரும், தமிழகத்தில் அவர் நினைத்தால் பத்தாயிரம் குடும்பங்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கலாம்’ என்று ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.


அதோடு நிற்காமல் ‘சூட்டிங்கில் அவரின் ஆன்மீகத்தால் ஈர்க்கப்பட்டு அவரைத் தேடி சில பேர் வந்தார்கள்  இன்று அவர்கள் அகோரிகளாக திரிந்து கொண்டு இருக்கிறார்கள், அவர்களின் பெற்றோர்கள் எல்லாம் என்னிடமே வந்து சொல்லியிருக்கிறார்கள்.


மேலும் போராடுகிறவர்களை எல்லாம் சமூக விரோதிகள் என்றும் சொல்லிக் கொண்டிருக்கிறார், இவரை சமீபகாலமாக சில பேர் பயன்படுத்திக் கொண்டு வருகிறார்கள் , அது நன்றாகவே தெரிகிறது, இல்லையென்றால் இப்படி எல்லாம் பேசமாட்டார். இவர் ஒரு சுண்டைக்காய் பயல் என்று கூறி இருந்தார்.


Advertisement

Advertisement

Advertisement