• May 19 2024

அடடே ரஜினியும் விஜய்யும் இப்படி ஒரு நிகழ்வில் கலந்து கொண்டிருக்கின்றார்களா?- திடீரென வைரலாகும் போட்டோ

stella / 1 year ago

Advertisement

Listen News!


தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் தான் நடிகர் விஜய். ஏராளமான ரசிகர் பட்டாளத்தைக் கொண்ட இவர் தற்பொழுது இயக்குநர் வம்சி இயக்கத்தில் வாரிசு என்னும் படத்தில் நடித்து வருகின்றார். இப்படம் குறித்த புதிய அப்டேட்டுக்களும் அடிக்கடி வெளியாகிக் கொண்டிருக்கின்றது.

இப்படத்தைத் தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அவரின் 67-வது திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார்.ஆனால் இது குறித்த சரியான அப்டேட்டுக்கள் இன்னும் வெளியாகவில்லை. இப்படமும் விக்ரம் படம் போல பிரமாண்டமாக இருக்கும் என ரசிகர்கள் கருதுகின்றனர்.


மேலும் பொதுவாக தளபதி விஜய் குறித்து எந்த தகவலாக இருந்தாலும் அது ரெண்டிங்கில் வந்து விடும் என்பது யாவரும் அறிந்ததே. இந்த நிலையில் விஜய் குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. 

அதாவது  விஜய் நடிப்பில் கடந்த 1995 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் விஷ்ணு,அப்படத்தின் 50-வது நாள் வெற்றியை கொண்டாட ரஜினி  அவருக்கு மாலை அணிவித்து கொண்டாடியுள்ளார்.இது குறித்த புகைப்படம் தான் வெளியாகியுள்ளது.




Advertisement

Advertisement