• May 03 2024

தனது அம்மாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து கியூட்டான புகைப்படத்தை பதிவிட்ட அனுஷ்கா

stella / 1 year ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் அனுஷ்கா. இவர் தமிழ் தெலுங்கு ஆகிய மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். அதுவும் இவர் நடித்த அர திரைப்படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றிருக்கின்றன.

அதிலும் இவர் பாகுபலி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பல கோடி ரசிகர்களின் மனதையும் கொள்ளை கொண்டார். இது தவிர விஜய், சூர்யா, ரஜினி எனப் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்திருக்கின்றார்.

மேலும் சமீபகாலமாக உடல் எடை அதிகரித்ததன் காரணமாக திரைப்பட வாய்ப்பின்றி தவித்து வருகின்றார்.இன்ஸ்டாவில் சில நேரங்களில் புகைப்படங்கள் பதிவிடும் அனுஷ்கா சமீப காலமாக நல்ல ஆக்டீவாக இருக்கிறார்.

இந்த நிலையில் தற்போது அவர் தனது அம்மா மற்றும் அப்பாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்டு இருக்கிறார் .அவரின் அம்மாவிற்கு பிறந்தநாள் என்பதால் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து அந்த புகைப்படத்தை பதிவிட்டு இருக்கிறார்.

இந்தப்புகைப்படம் ரசிகர்களிடையே வைரலாகி வருவதோடு பலரும் தமது வாழ்த்துக்களை கூறி இருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement