• Sep 27 2023

கார்த்திக்கின் முதல் மனைவி சுந்தரி தான் என அறிந்த அனு- அதிர்ச்சியில் உறைந்து நிற்கும் மொத்தக்குடும்பம்- கார்த்திக்கை அடித்த அனு- Sundari - Promo

stella / 1 month ago

Advertisement

Listen News!

சன்டிவியில் இறுதிக் கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டு செல்லும் சீரியல் தான் சுந்தரி. இந்த சீரியலில் கார்த்திக் அனுவை இரண்டாம் தாரமாக திருமணம் செய்திருக்கும் விஷயம் சுந்தரி வீட்டில் எல்லோருக்கும் தெரிந்து விட்டது.

ஆனால் அனுவுக்கு சுந்தரி கார்த்திக்கின் முதல் மனைவி என்று தெரியாமல் இருந்தது. அத்தோடு சுந்தரி கார்த்திக் மீது ஆசை வைத்திருப்பதாக தவறாக நினைத்து சுந்தரியிடம் பேசாமல் இருந்தார்.


இப்படியான நிலையில் அடுத்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் சுந்தரி வீட்டுக்கு வரும் அனு சுவிட் எடுத்துக்கோங்க சுந்தரி கார்த்திக் என்று சொல்ல எல்லோரும் அதிர்ச்சியடைகின்றனர்.

பின்னர் கார்த்திக் வந்ததும் வாங்க சேர் நீங்க தான் முக்கியமான ஆளு என்று தான் கொண்டு வந்த சுவிட் பாக்ஸை கார்த்திக் முகத்தில் வீசி திட்டுகின்றார். இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைவதைக் காணலாம்.

Advertisement

Advertisement

Advertisement