• May 10 2024

விஜய்யின் லியோ படத்துடன் அதிரடியாக களமிறங்கும் மற்றொரு மாஸ் ஹீரோவின் படம்! வெளியான அறிவிப்பு இதோ!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

இதுவரை தளபதி விஜய்யின் திரைப்படங்களுக்கு இல்லாத அளவிற்கு எக்கச்சக்கமான எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் லியோ திரைப்படம் தயாராகி வருகிறது. மாஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் இணைந்துள்ள இயக்குநர் லோகேஷ் கனகராஜ் - தளபதி விஜய் கூட்டணியில் உருவாகும் லியோ திரைப்படத்தின் மீது இத்தனை எதிர்பார்ப்புகள் இருக்க நிறைய காரணங்கள் இருக்கின்றன. 

தளபதி விஜய் உடன் த்ரிஷா கதாநாயகியாக நடிக்க, பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், ஆக்ஷன் கிங் அர்ஜுன், பிரியா ஆனந்த், இயக்குனர் மிஷ்கின், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர், மலையாள நடிகர் மேத்யூ தாமஸ், மனோபாலா மற்றும் ஜார்ஜ் மர்யன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். 

இந்நிலையில்  வருகிற அக்டோபர் 19ஆம் தேதி ஆயுத பூஜை வெளியீடாக தளபதி விஜயின் லியோ திரைப்படம் ரிலீஸ் ஆகும் என பட்டக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

இதே ஆயுத பூஜை வெளியிடாக தெலுங்கு சினிமாவின் முன்னணி மாஸ் ஹீரோ ஒருவரின் திரைப்படமும் ரிலீஸாக உள்ளது. இயக்குநர் போயப்பட்டி சீனி இயக்கத்தில் தெலுங்கு சினிமாவின் பிரபல ஹீரோக்களில் ஒருவரான நடிகர் ராம் போத்தினேனி, நடிக்கும்  #BoyapatiRAPO திரைப்படம் ஆயுத பூஜை வெளியிடாக லியோ படத்துடன் ரிலீஸ் ஆகும் என கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தெலுங்கு சினிமாவின் மற்றொரு மாஸ் ஹீரோவாக திகழும் ரவி தேஜா கதாநாயகனாக நடிக்கும் புதிய அதிரடி திரைப்படமும் இந்த ஆயுத பூஜை வெளியீடாக வருகிற அக்டோபர் 20ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தளபதி விஜயின் லியோ திரைப்படம் ரிலீஸ் ஆகும் ஆயுத பூஜை ரேசில் மற்றொரு மாஸ் ஹீரோவான ரவிதேஜாவின் டைகர் நாகேஸ்வர ராவ் திரைப்படமும் ரிலீஸாவதால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருக்கின்றனர்.


Advertisement

Advertisement

Advertisement