• May 05 2024

விஜய்டிவி பிரபலங்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி பற்றி வெளியாகிய அறிவிப்பு- எப்போது தெரியுமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!


தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி ரசிகர்களுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே காணப்படுகின்றது. அந்த வகையில் விஜய் டிவியில் புதுப்புது சீரியல்கள் ஆரம்பித்து ஒளிபரப்பாகி வருகின்றது.அத்தோடு டிஆர்பியிலும் இவையே முன்னணியில் நிற்கின்றன.

அதிலும் தற்பொழுது புதிதாக ஆஹா கல்யாணம், பொன்னி என இரு புத்தம் புதிய சீரியல்கள் ஆரம்பித்துள்ளன. விஜய் டிவி சீரியல்களில் நடித்து வருபவர்கள்  அதிக அளவு ரசிகர்களை பெற்று வருகிறார்கள். அவர்களது இன்ஸ்டா கணக்குகளில் லட்சக்கணக்கில் குவியும் லைக்குகள் அதற்கு சாட்சி.


சீரியல்களில் சிறப்பாக இருப்பவர்களை தேர்வு செய்து விஜய் டிவி விருதுகள் கடந்த பல வருடங்களாக வழங்கப்பட்டு வருவது எல்லோருக்கும் தெரிந்தது தான்.தற்போது விஜய் டிவியின் 8ம் வருட விருது விழா வரும் ஏப்ரல் 23ம் தேதி நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.இதனால் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருக்கின்றனர். 



Advertisement

Advertisement

Advertisement