• May 05 2024

ஏ.ஆர். ரஹ்மானை விட அதிக சம்பளம் வாங்கும் அனிருத்..? அதுவும் இத்தனை கோடியா? வாயை பிளக்கும் ரசிகர்கள்.!

Jo / 9 months ago

Advertisement

Listen News!

கோலிவுட்டில் இருந்து பாலிவுட் சென்றிருக்கும் அட்லி, கையோடு இசையமைப்பாளர் அனிருத்தையும் அழைத்துச் சென்றிருக்கிறார். ஷாருக்கானை வைத்து அட்லி இயக்கியிருக்கும் ஜவான் படத்திற்கு அனிருத் தான் இசை. ஜூலை 10ம் தேதி வெளியிடப்பட்ட ஜவான் ட்ரெய்லருக்கு 100 மில்லியனுக்கும் அதிகமான வியூஸ் கிடைத்திருக்கிறது. ஜவானுக்காக பெரிய தொகையை சம்பளமாக வாங்கியிருக்கிறாராம் அனிருத்.

ஜவான் ட்ரெய்லரில் அனிருத்தின் இசை பாலிவுட் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துவிட்டது. ஷாருக்கான் படத்திற்கு இசையமைக்க அனிருத்துக்கு ரூ. 10 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

ஆஸ்கர் நாயகனான ஏ.ஆர். ரஹ்மான் படம் ஒன்றுக்கு ரூ. 8 கோடி வாங்குகிறார். இந்நிலையில் அனிருத்தோ ரூ. 10 கோடி வாங்கியிருக்கிறார். கோலிவுட்டில் மிகவும் பிசியான இசையமைப்பாளராக இருந்து வருகிறார் அனிருத். ரஜினி, விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இது தவிர்த்து படங்களில் பாட்டு பாடவும் செய்கிறார்.

முன்னதாக கடந்த ஜனவரி மாதம் ஷாருக்கான், தீபிகா படுகோன் நடிப்பில் வெளியான பதான் படம் ரூ. 1000 கோடி வசூல் செய்தது. இதையடுத்து ஜவான் படம் மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளது. ட்ரெய்லரை பார்த்த ஷாருக்கான் ரசிகர்களோ, ஜவான் கண்டிப்பாக பதானின் வசூல் சாதனையை முறியடிக்கும் என்கிற நம்பிக்கை எங்களுக்கு வந்துவிட்டது என தெரிவித்துள்ளனர். மேலும் அட்லியை தொடர்ந்து பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள்.


Advertisement

Advertisement

Advertisement