• Apr 01 2023

வயசுக்கு மீறிய செயலில் அனிகா.. இந்த வயதில் இதெல்லாம் தேவை தானா..? திட்டித் தீர்க்கும் ரசிகர்கள்..!

Prema / 2 weeks ago

Advertisement

Listen News!

மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக பல்வேறு படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை அனிகா. இதனையடுத்து 'என்னை அறிந்தால்' என்ற படத்தின் வாயிலாக தமிழிலும் கால் பதித்திருந்தார். குழந்தை நட்சத்திரமாக பல படங்களிலும் நடித்து வந்த அனிகா தற்போது ஹீரோயினாகவும் களமிறங்கி இருக்கின்றார். 


அந்த வகையில் இவர் ஹீரோயினாக 'ஓ மை டார்லிங்' என்ற திரைப்படத்தில் தற்போது நடித்திருக்கின்றார். ஆல்ஃப்ரெட் டி சாமுவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் மெல்வின் ஜி பாபு என்பவருக்கு ஜோடியாக அனிகா நடித்திருக்கிறார். 


மேலும் இப்படமானது காதலை மையமாக வைத்து உருவாகியுள்ள ரொமாண்டிக் கதையம்சம் நிறைந்த ஒரு படமாகும். இதில் லிப்லாக் காட்சிகளில் அசால்டாக நடித்து ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சி கொடுத்திருந்தார். இதனையடுத்து பல சர்ச்சைகளிலும் சிக்கி இருந்தார்.


இந்நிலையில் அனிகா தற்போது இப்படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது, வயதுக்கு மீறி நடந்து கொண்ட விதத்தால் மீண்டும் சர்ச்சைகளுக்கு ஆளாகி உள்ளார். அதாவது விழா மேடையில் கால் மேல் கால் போட்டுக்கொண்டு அமர்ந்திருந்தார்.


அதுமட்டுமல்லாது அவரை பேச அழைத்த போது ஓவராக ரியாக்ஷன் கொடுத்து,  ஓவர் ஸ்டைலாக நின்று பேசி இருக்கின்றார். இவர் நடந்து கொண்ட விதத்தைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும் 18 வயதில் இப்படியா..? இது ஓவராக இல்லையா..? எனக் கேட்டு தாறுமாறாக விளாசி வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement