• May 04 2024

ஆனந்தி மறைத்த பதற வைக்கும் நிகழ்வு... தங்கையை காப்பாற்ற கயல் எடுத்த மாபெரும் முடிவு... எதிர்பாராத விதமாக கயலுக்கு காத்திருந்த அதிர்ச்சி... Kayal serial promo..!

Prema / 8 months ago

Advertisement

Listen News!

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும்  பிரபல ஹிட் சீரியல்களில் ஒன்று 'கயல்'. இந்த சீரியலானது டிஆர்பி ரேட்டிங்கில் முதன்மையான ஒரு தனி இடத்தைப் பிடித்திருக்கின்றது. இந்த சீரியலில் அடுத்து என்ன நடக்கவுள்ளது என்பது குறித்து அறியப் பலரும் ஆவலாக உள்ளனர்.


இந்நிலையில் இன்றைய நாளுக்கான ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கின்றது. அதில் பிரபு உயிரிழந்தமையை ஆனந்தி மறைக்கின்றார். பின்னர் அங்கு வந்த கயலுக்கு பிரபு இறந்து விட்டான் என்ற உண்மை தெரிந்து விடுகிறது. இதனால் கயல் அதிர்ச்சி அடைகின்றார். பின்னர் தங்கையை காப்பாற்றுவதற்காக கயல் ஒரு மாபெரும் முடிவினை எடுக்கின்றார்.


பிரபு இறந்தமையை மூடி மறைக்கின்றனர். அந்த சமயத்தில் அங்கு வந்தவர்கள் "நீங்க இரண்டு பேரும் ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க" எனக் கேட்கின்றனர். பின்னர் கயல் உண்மையை சொல்வதற்காக ஆனந்தியை இழுத்துக் கொண்டு வெளியே செல்கின்றார். கயல் தங்கையை தரதரவென இழுத்துச் செல்வதை பார்த்த அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.


இதனையடுத்து இனி என்ன நடக்கப்போகிறது என்பதனைப் பொறுத்திருந்து பார்ப்போம்.


Advertisement

Advertisement

Advertisement