• May 12 2024

நட்புக்கு மரியாதை செய்யும் கே.எஸ்.ரவிக்குமார் - விக்ரமன் மகனின் புதிய படத்திற்கு கிடைத்த சலுகை

stella / 1 year ago

Advertisement

Listen News!

இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் ஆரம்பகாலக் கட்டத்தில் சினிமாவில் பல சிரமங்களை எதிர்கொண்டிருந்தபோது, இயக்குநர் விக்ரமன் தன்னுடைய 'புதுவசந்தம்' படத்தின் உதவி இயக்குநருக்கான வாய்ப்பை வழங்கினார்.

அதனைத் தொடர்ந்தே இயக்குநராக அறிமுகமாகிய கே.எஸ்.ரவிக்குமார் ரஜினி கமல் விஜய் அஜித் என முன்னணி நடிகர்களை வைத்து திரைப்படங்களை இயக்கி அதிலே வெற்றியும் கண்டார்.அதனைத் தொடர்ந்து தற்பொழுது சில படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகின்றார்.


இந்த நிலையில் இவரின் உதவி இயக்குநராக இருந்த  சூர்யகதிர், கார்த்திகேயன் இணைந்து 'ஹிட்லிஸ்ட்' என்னும் படத்தை இயக்கி வருகின்றனர்.ந்தப் படத்தை 'தெனாலி', 'கூகுள் குட்டப்பா' படங்களுக்கு பிறகு கே.எஸ்.ரவிக்குமாரின் ஆர்.கே.செல்லுலாயிட்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

நடிகர் சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தின் அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது. காமெடி, ஆக்‌ஷன் ட்ராமாவாக உருவாகும் இப்படம் பூஜையுடன் தொடங்கியது.மேலும் விக்ரமனுடன் இருந்த நட்புக்கு மரியாதை செய்யும் விதமாக விக்ரமன் மகன் கனிஷ்கா நாயகனாக நடிக்கும் படத்தை கே.எஸ்.ரவிக்குமார் தயாரிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement