• May 11 2024

சூப்பர் ஹிட் படத்தில் கதாநாயகியாக கமிட்டான அம்மு அபிராமி- அடடே இயக்குநர் இவர் தானா?

stella / 1 year ago

Advertisement

Listen News!


ராட்சசன் ,அசுரன் போன்ற திரைப்படங்களில் நடித்து பிரபல்யமாகவர் தான் அம்மு அபிராமி. இப்படங்களைத் தொடர்ந்து விஜய்டிவியில் ஒளிபரப்பான குக்வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் தனக்கென ஓர் ரசிகர் பட்டாளத்தை சேர்த்துக் கொண்டார்.

இந்த நிகழ்ச்சியை அடுத்து அறிமுக இயக்குநர் B.சதீஸ் குமரன் இயக்கத்தில், அம்மு அபிராமி,கோமல் ஷர்மா என்பவருடன் இணைந்து புதுமையான சைக்கலாஜிகல் ஃபேண்டஸி திரில்லர் திரைப்படமான “பெண்டுலம்” என்னும் திரைப்படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார்

 சைமன் கிங் இசையமைக்கும் இந்த படத்திற்கு ஆனந்த் ஒளிப்பதிவு செய்ய, ராம் சதீஷ் எடிட்டிங் பணிகளை மேற்கொள்கிறார்.சென்னை, தலக்கோணம், ஆந்திரா கர்னூல் மாவட்டம் மற்றும் கோவா முதலாக இதுவரை படப்பிடிப்பு நடத்தப்படாத இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பை நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.


இதனால் இவரது ரசிகர்கள் கடும் குஷியில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement