• May 02 2024

லிப் லாக் முத்தத்துடன் புதிய காதலனை அறிமுகப்படுத்திய அமலாபால்- வைரலாகும் வீடியோ

stella / 6 months ago

Advertisement

Listen News!

நீலத்தாமரா என்னும் மலையாள படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாகியவர் தான் அமலாபால்.தமிழில் மைனா என்னும் திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபல்யமானார். இப்படத்தைத் தொடர்ந்து இவருக்கு படவாய்ப்புக்கள் குவிய ஆரம்பித்தன.

மேலும் இயக்குநர் ஏ.எல். விஜய் இயக்கிய தெய்வத் திருமகள், தலைவா உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.இயக்குநர் விஜய்யை காதலித்து திருமணம் செய்தார். பின்னர் அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர்.


இதைத்தொடர்ந்து மீண்டும் சினிமாவில் நடித்து வந்த அமலாபால் கவர்ச்சியாக நடித்து வந்தார். சினிமா மட்டுமின்றி சமூக வலைத்தளங்களிலும் ஆர்வம் கொண்ட அமலாபால் வெளிநாடு மற்றும் பல்வேறு இடங்களுக்கு சென்று புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். 

நண்பர்கள் உடன் ஜாலியாக சுற்றுலா செல்வதும் பாருக்கு செல்வதும் என கவர்ச்சியான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வந்தார்.


அமலா பால் இன்று தனது 32-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இவருக்கு ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் என பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அமலா பாலின் நெருங்கிய நண்பரான ஜனா தேசாய் என்பவர் அவருக்கு லவ் புரோபோஸ் செய்துள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.


Advertisement

Advertisement

Advertisement