• Sep 27 2023

என்றும் ஆண்டவனோடு- சுதந்திர தினத்தை வித்தியாசமான முறையில் கொண்டாடிய Mahalakshmi

stella / 1 month ago

Advertisement

Listen News!

சீரியல் நடிகை மகாலக்ஷ்மி பிரபல தயாரிப்பாளர் ரவீந்தர் இருவரும் கடந்த ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இந்த திருமணத்திற்கு பின் பல சர்ச்சைகள் வந்தாலும், அவை அனைத்தையும் எதிர்கொண்டார்கள்.


திருமணத்திற்கு பின் இருவருமே தங்களுடைய சமூக வலைத்தளத்தில் அவ்வப்போது ஜோடியாக இருக்கும் புகைப்படங்களை பதிவு செய்வார்கள்.இந்நிலையில், சமீபத்தில் மகாலக்ஷ்மி - ரவீந்தர் ஜோடி விவாகரத்து செய்துவிட்டார்கள் என தகவல் ஒன்று பரவி வந்தது.


இதை அறிந்த மகாலக்ஷ்மி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.இந்த பதிவு தனது கணவருடன் இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்து, நாங்கள் இருவரும் என்றென்றும் கணவன் மனைவி தான் என விளக்கம் கொடுத்து அழகாக சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்திருந்தார்.


தொடர்ந்து கெரியரில் கவனம் செலுத்தி வருகின்றார்கள். இந்த நிலையில் இன்று சுதந்திர தினத்தை இந்தியா முழுவதும் கொண்டாடிவருவதால் மகாலக்ஷ்மியும் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் கடவுளை வணங்கும் புகைப்படங்களைப் பதிவிட்டு சுதந்திர தின வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது


Advertisement

Advertisement

Advertisement