• May 06 2024

குட்நைட் பட அனு மாதிரி பொண்ணு கேட்கிறவங்க எல்லோரும் கேடிகள்- ஓபனாகப் பேசிய அனிதா சம்பத்

stella / 9 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர் தான் மணிகண்டன். இவர்கதாநாயகனாக நடித்து இறுதியாக வெளியாகிய திரைப்படம் தான் குட் நைட்’. மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ், எம் ஆர் பி என்டர்டைன்மென்ட் நிறுவனங்கள் இணைந்து இந்த படத்தை தயாரித்து இருந்தது.

அறிமுக இயக்குநர் விநாயக் சந்திரசேகரன் இந்த படத்தை இயக்கியிருந்தார். ஷான் ரோல்டன் இந்த படத்திற்கு இசையமைத் இந்த படத்தில் மீத்தா ரகுநாத், ரமேஷ் திலக், பக்ஸ், பாலாஜி சக்திவேல் உட்பட பல நடிகர்கள்நடித்து இருந்தனர்.


படத்தில் மிடில் கிளாஸ் குடும்ப பையன் மோகன் இருக்கிறார். இவருக்கு தூங்கும்போது குறட்டை வரும். இது நாளடைவில் அவருக்கு பெரும் பிரச்சினையாக இருக்கிறது. இதனால் குடும்பம், நண்பர்கள், அலுவலகம் போன்ற பல இடங்களில் மோகன் அவமானப்படுகிறார். 

ஒரு கட்டத்தில் அவன் விடும் குறட்டையை காரணம் காட்டி இவருக்கு காதல், வேலை என்று அனைத்திலும் பிரச்சனை வருகிறது. பின் அதை எல்லாம் இவர் எப்படி சமாளித்தார் என்பதே படத்தின் கதை. இந்த படம் வெளியான பின்னர் இந்த படத்தில் நடித்த மணிகண்டனை போல ரமேஷ் திலக்கிற்கும் பாராட்டுக்கள் குவிந்தது. 

அதே போல இந்த படத்தில் அனு என்ற கதாபாத்திரத்தில் நடித்த மீத்தா ரகுநாத்திற்கும் இளசுகள் பட்டாளம் குவிந்தது. மேலும், தங்கள் வாழ்க்கையில் அனு கதாபாத்திரம் போல ஒரு பெண் இருந்தால் நன்றாக இருக்கும் என்று இளசுகள் பலர் சமூக வலைதளத்தில் புலம்பி தள்ளி வந்தனர்.


இப்படி ஒரு நிலையில் அனு போன்ற பெண் கேட்கும் பசங்க எல்லாரும் கேடிகள் என்றும் பெண்கள் யாரும் அனு போல இருக்க கூடாது என்றும் பிக் போல புகழ் அனிதா சம்பத் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து பதிவிட்டுள்ள அவர் ‘குட்நைட் அனு மாதிரி (மீதா ரகுநாத்) பொண்ணு வேணும்ன்னு நினைக்கிற அம்புட்டு பயலுகளும் கேடி பசங்க. ‘நான் என்ன பேசுனாலும் அவளோட விருப்பத்தை சொல்லாம, நாம சொல்றதை மட்டும் மூடிகிட்டு கேக்குற பொண்ணு வேணும்’ன்னு பெருசா சொல்றதுக்கு பதிலா, ‘அனு மாதிரி வேணும்’ன்னு சுருக்கமாக சொல்றாங்க. 

நாம அனு மாதிரி எல்லாம் இருக்க வேண்டாம் தங்கங்களே. நம்ம எதையும் சகித்துக் கொண்டு பண்ண வேண்டாம். நமக்கு பிடிச்சதை கேட்டு வாங்கிப்போம். நம்மளோட விருப்பத்தை வெளிப்படையாக சொல்லுவோம். நம்ம வாழ்க்கையை நாம் வாழ்வோம். பாய் ஃப்ரண்ட் அல்லது கணவருடன் நல்ல புரிந்து கொள்ளும் உறவில் இருப்போம்.நம் எண்ணத்தை வெளிப்படையாக பேசும் பெண்ணாக இருந்தால் மட்டுமே மகிழ்ச்சியாக இருக்க முடியும். 

அனு நல்ல பொண்ணு தான். அதுக்குன்னு எல்லா பொண்ணும் அனு மாதிரி அமைதியா இருந்த மட்டும் தான் நல்ல பொண்ணு கிடையாது. உங்களுடைய ஆண் நண்பர்கள் பொண்ணு போல இருக்க வேண்டும் என நினைத்தால் கவனமாக இருங்கள்’ என்று கூறியுள்ளார். அனிதா சம்பத்தின் இந்த பதிவை பலர் வரவேற்று வரும் அதே வேளையில் இவரின் இந்த கருத்திற்கு சில எதிர்மறையான கமண்டுகளும் குவிந்து வருகிறது.








Advertisement

Advertisement

Advertisement