கே.எஸ். ரவீந்திரா இயக்கத்தில் பாலகிருஷ்ணா நடித்த படம் தான் டக்கு மகராஜ். இந்தப் படம் கடந்த 12ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் பாபி தியோல் பாலகிருஷ்ணாவுக்கு வில்லனாக நடித்திருக்கிறார்.
இந்தப் படம் வெளியாகும் முன்பே இதிலிருந்து வெளியான தபிடி திபிடி என்ற பாடல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதற்கு காரணம் அந்த பாடலில் பாலகிருஷ்ணா ஹீரோயின் பின்பக்கம் இரண்டு கைகளாலும் வெறித்தனமாக தாக்கிய ஸ்டெப்கள் தான்.
d_i_a
இதைத்தொடர்ந்து இந்த பாடல் வைரலான நிலையில் பால கிருஷ்ணா மீது பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் வயதை ஒத்த இவருக்கு இப்படி ஒரு ஆட்டம் தேவையா? கொஞ்சம் கூட பக்குவம் இல்லையா என நெட்டிசன்கள் தமது கருத்துக்களை கொட்டி தீர்த்தார்கள்.
அதற்குப் பிறகும் இந்த படத்திற்கான ப்ரோமோஷன்கள் நடைபெற்ற போதும் நடிகை ஊர்வசிக்கு அருகில் இருந்து பாலகிருஷ்ணா செய்த சில்மிஷங்களும் இணையத்தில் வைரலானது.
இந்த நிலையில் தற்போது டக்கு மகராஜ் படத்தில் நடித்த நடிகை ஊர்வசி ரவுத்தேலா நடித்த பட காட்சிகள் அத்தனையும் டெலிட் செய்யப்பட்டுள்ளதாக தற்போது அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தகவல் பாலகிருஷ்ணாவின் ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல் ஊர்வசி ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆனாலும் இதற்கான காரணம் என்ன என்பது கேள்விக் குறியாகவே காணப்படுகிறது
Listen News!