• May 04 2024

ஹார்ட் ஒர்க் எல்லாம் கேவலமாக இருக்கிறது பான் பராக்க போட்டு துப்பணும்- பொன்னியின் செல்வன் படத்தை வச்சு செய்த ப்ளூ சட்டை மாறன்

stella / 1 year ago

Advertisement

Listen News!


வெள்ளித்திரையில் வெளியாகும் திரைப்படங்களை கிண்டலாகவும், கேலியாகவும் விமர்சனம் செய்து வருபவர் தான் ‘ப்ளூ சட்டை மாறன்’. ரஜினி, கமல், விஜய், அஜித் என யாருடைய படமானாலும் பாரபட்சம் பார்க்காமல் கிண்டல் செய்து வருகின்றார்.

இவருடைய விமர்சனங்களால் படத்தின் வசூல் பாதிக்கப்படுகிறது என சினிமா பட இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் புலம்பி கொட்டுகின்றனர்.அண்மையில் கூட வெந்து தணிந்தது காடு குறித்து பேசி கௌதம் வாசுதேவனிடம் முறையாக வாங்கிக் கட்டினார்.


இருப்பினும் இவருடைய வீடியோவுக்கென்று தனி ரசிகர் பட்டாளம் காணப்படுகின்றது. இவர் முதலில் உதவி இயக்குநராக தான் பணிபுரிந்தார். ஆனால், அவருக்கு சரியான வாய்ப்புகள் கிடைக்காததால் படங்களை விமர்சனம் செய்வதில் இறங்கிவிட்டார். இப்படி ஒரு நிலையில் இவர் ‘ஆன்டி இந்தியன்’ என்ற படத்தை இயக்கி இருந்தார்.

 இப்படி ஒரு நிலையில் நேற்று வெளியான பொன்னியின் செல்வன் படத்தை விமர்சனம் செய்துள்ளார்.சமீபத்தில் இந்த படத்தின் விமர்சனத்தை வெளியிட்டுள்ள ப்ளூ சட்டை மாறன் வழக்கம் போல இந்த படத்தை கழுவி ஊற்றி இருக்கிறார். அதுவும் முதல் பாதியில் படத்தை புகழந்து தள்ளி இருந்தார்.

 பின்னர் இது பொன்னியின் செல்வனை ஆஹா ஓஹோ என்று புகழ்பவர்களுக்னு தான் இப்படி சொன்னேன் என்று கூறிவிட்டு பின்னர் வழக்கம் போல இந்த படத்தை வெச்சி செய்து இருக்கிறார்.இந்த படத்தின் செட் வொர்க் ரேபரேஷன்ஸுக்கு பத்மாவதி, பாஜிராவ் மஸ்தானி இந்த படத்தை எல்லாம் பார்த்தார்களா இல்லையா. ஹார்ட் ஒர்க் எல்லாம் கேவலமாக இருக்கிறது. 


இந்த படத்தை pride of indian சினிமானு வடக்கன் கிட்ட காண்பிச்சா பான் பராக்க போட்டு துப்பிடுவான். மேலும், இந்த படம் தெலுங்கு படம் என்று படத்தின் ஓனரே சொல்லிவிட்டார் என்று சுஹாசினி ஆந்திராவில் பேசிய வீடியோவை சுட்டிக்காட்டி இருக்கிறார்.இதனால் இவர் மீது ரசிகர்கள் கோபத்தில் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது



Advertisement

Advertisement

Advertisement