• Mar 31 2025

விபத்தில் சிக்கிய அஜித்..! கார் பந்தயத்தின் போது விபரீதம்...

Mathumitha / 2 months ago

Advertisement

Listen News!

தல அஜித் எப்போதும் ஒரு கொள்கையுடன் நேர்மை தவறாது வாழ்ந்து வரும் ஒரு சிறந்த மனிதன்.இவர் தற்போது சினிமா பாதி கார் பந்தயம் பாதி என தனது வாழ்க்கையை நகர்த்தி வருகின்றார்.இவர் நடிப்பில் தற்போது இரண்டு படங்கள் தயாராகி இருக்கும் நேரத்தில் இரு படங்களினதும் வெளியீடு தொடர்பான எந்தவித  உத்தியோகபூர்வ அறிவிப்புகளும் இதுவரை வெளியாகாமையினால் இவரது ரசிகர்கள் மிகவும் சோகத்தில் உள்ளனர்.


இந்நிலையில் இப்போது குடும்பத்துடன் புது வருட கொண்டாட்டத்தினை முடித்து தனது குடும்பத்தை சிங்கப்பூரில் வைத்து வழி அனுப்பிவிட்டு தனது கார் பந்தயத்திற்கான பயிற்சிகளை மேற்கொண்டுவருகின்றார்.இது தொடர்பான அப்டேட்டுகள் நாளுக்கு நாள் வெளியாகி வருகின்றது.


அந்தவகையில் தற்போது அஜித் கார் பந்தயத்திற்காக வேண்டிய வெள்ளை மற்றும் சிவப்பு நிற காரில் இவர் பயிற்சி செய்து ஓட்டி பார்த்து கொண்டிருந்த வேளையில் அக் கார் சுவருடன் மோதுண்டு விபத்திற்குள்ளாகியுள்ளது.இருப்பினும் இவ் விபத்தில் அஜித்திற்கு எதுவித காயமும் ஏற்படவில்லை என குறித்த மைதானத்தில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளது.

Advertisement

Advertisement