பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் எட்டின் 93வது நாளுக்கான நான்காவது ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில் தர்ஷா குப்தா அதிரடியாக என்ட்ரி கொடுத்து உள்ளார்.
இதன் போது போட்டியாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த தர்ஷா குப்தா பேசுகையில், யாரெல்லாம் என்னைய வெளியே அனுப்பினீர்களோ.. அவங்களுக்கு எல்லாம் பதிலடி கொடுத்து தர்ஷா அப்படி என்றால் யார் என்பதை காட்டத்தான் மீண்டும் வந்திருக்கின்றேன்.
d_i_a
என்ன அருண்? சீரியலில் எப்படி நடித்துக் கொண்டிருந்தீர்களோ அதே போலத்தான் இப்பவும் ஆக்ட் பண்ணிட்டு இருக்கீங்க.. எப்ப தான் நான் உங்களுடைய உண்மையான முகத்தை பார்ப்பது என அருணை பார்த்து கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் முத்துவிடம் பேசிய தர்ஷா, நீங்க எப்படித்தான் எல்லா நேரமும் ஒரே மாதிரி முகத்த வச்சு இருக்கீங்களா தெரியல.. உங்களை யாரும் கழுவி ஊத்தினாலும் பல்ல காட்டிட்டே இருக்கீங்க என்று ஆக்சன் போட்டு காட்டியுள்ளார்.
இதன் போதும் முத்து சிரித்த முகத்துடன் இருக்க, இதோ இப்படித்தான் முகத்தை வச்சுட்டு இருக்கீங்களே... நீங்க நடிகன்டா.. உங்க மேக்கப் தான் எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது என்று அதிரடியாக தெரிவித்துள்ளார். அதற்கு முத்துக்குமரன் சிரித்துக் கொண்டே நன்றி என தெரிவித்துள்ளார்.
Listen News!