• May 03 2024

"எனக்கும் யாஷிகாவிற்கும்"... காதல் கல்யாணம் குறித்து முதன் முறையாக உண்மையை கூறிய அஜித்தின் மச்சான்..!

Prema / 10 months ago

Advertisement

Listen News!

நடிகர் அஜித்தின் மனைவியான ஷாலினியின் தம்பி தான் ரிச்சர்ட் ரிஷி. இவர் சினிமாவில் பிரபல நடிகராக உள்ளார். இவரும் தனது சகோதரிகளை போன்று சிறுவயதில் இருந்தே தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல்வேறு மொழிகளில் நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 


இந்த நிலையில், இன்ஸ்டாகிராமில் இவர் பதிவிட்டுள்ள புகைப்படங்கள் காதல் சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கின்றன. அதுமட்டுமல்லாது இவர்களின் காதல் விவகாரம் சமூக வலைத்தளங்களில் சமீபகாலமாக பரபரப்பாக பேசப்பட்டும் வருகின்றன.

இவ்வாறான சர்ச்சைக் கருத்துக்களுக்கு இதுவரை காலமும் ரிஷி மற்றும் யாஷிகா இருவருமே எந்தவித கருத்துமே தெரிவிக்காமல் மௌனம் காத்து வந்திருந்தனர். இந்நிலையில் தற்போது இடம்பெற்ற நேர்காணல் ஒன்றில் ரிச்சர்ட் ரிஷி இந்த விவகாரம் குறித்து முதன் முறையாக மனம் திறந்து பேசியுள்ளார்.


அந்தவகையில் அவர் கூறுகையில் "நானும் யாஷிகாவும் நடிக்கும் 'சில நொடிகளில்' படத்தின் புகைப்படங்களைத்தான் நான் சோஷியல் மீடியாவில் ஷேர் செய்தேன். இப்படத்தினை, கன்னட இயக்குநர் வினய் பரத்வாஜ் என்பவர் இயக்குகிறார். அத்தோடு முரளி மனோகர் தயாரிக்கிறார். 

இந்தப் படத்தின் உடைய கதைப்படி நானும் யாஷிகாவும் ஹாலிடே செல்வோம். அப்படி, செல்லும் இடத்தில் போனிலிருந்து நாங்கள் இருவரும் நெருக்கமாக செல்ஃபி எடுத்துக்கொள்வது போன்ற காட்சிகளைப் படமாக்கினார்கள். 


அநத சமயத்தில் எடுத்த படங்களைத்தான் நான் அப்படத்தின் புரொமோஷனுக்காக எனது சமூக வலைத்தள பக்கங்களிலும் பகிர்ந்து கொண்டேன். மற்றபடி எனக்கும் யாஷிகாவுக்கும் நீங்கள் எல்லோரும் நினைப்பது போன்று காதலும் கிடையாது; எந்தக் கல்யாணமும் கிடையாது. 


நாங்கள் எடுத்த அந்தப் புகைப்படங்களைப் பார்த்துவிட்டு ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதமாக எடுத்துக் கொள்கிறார்கள். நாங்கள் இருவரும் வெளியூரில் இருந்ததால் உடனடியாக இதுகுறித்து எதுவும் எங்களால் பேசமுடியவில்லை" என்றார் நடிகர் ரிச்சர்ட் ரிஷி.

இவ்வாறாக யாஷிகாவை தான் காதலிக்கவில்லை என்பதை நேரடியாகவே கூறி இருக்கின்றார் அஜித்தின் மச்சான்.

Advertisement

Advertisement

Advertisement