• May 08 2024

AK61 ஷூட்டிங்கில் இருந்து வெளியாகிய லேட்டஸ்ட் கிளிக்- மாஸ் லுக்கில் நிற்கும் அஜித்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்கும் அஜித் நடிப்பில் இறுதியாக வலிமை என்னும் திரைப்படம் வெளியாகிய பைக் ரேசிங் ஆக்ஷன் காட்சிகள் என்பன அதிகமாக இருந்தாலும் இப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது.

இதனைத் தொடர்ந்து தற்பொழுது அஜித் மீண்டும் எச். வினோத் இயக்கத்தில் தனது 61 வது படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தை போனிகபூர் தயாரித்துள்ளார்.

இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் இதில் நடிக்கவுள்ள நட்சத்திரங்கள் குறித்த விவரங்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.

அதன்படி மஞ்சு வாரியர், வீரா உள்ளிட்ட நடிகர்களை தொடர்ந்து நேற்று நடிகர் மகாநதி ஷங்கரும் அப்படத்தில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக AK61 ஷூட்டிங்கில் இருந்து அஜித்தின் புகைப்படங்கள் வெளியாகி வருகிறது.அதன்படி தற்போது கருப்பு நிற சட்டையில் அஜித் ரசிகர் ஒருவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளதைக் காணலாம்.

Advertisement

Advertisement

Advertisement