• Sep 08 2024

’விடாமுயற்சி’ அப்டேட்டை எதிர்பார்த்து ஏமாற்றம்.. ஆனால் அஜித் ரசிகர்களுக்கு ஒரு குஷி தகவல்..!

Sivalingam / 5 months ago

Advertisement

Listen News!


அஜித் நடித்தவிடாமுயற்சிபடத்தின் அப்டேட் இன்று வரும் என்றும் குறிப்பாக பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாக அதிக வாய்ப்பு இருப்பதாக நேற்றே சமூக ஊடகங்களில் செய்திகள் கசிந்தது. பொதுவாக அஜித் படங்களின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் எந்தவித முன் அறிவிப்பும் இன்றி வெளியாகும் என்பதால் அதே போல் இன்று சர்ப்ரைஸ் ஆக  வெளியாகும் என்று கூறப்பட்ட நிலையில் இதுவரை எந்த அப்டேட்டும் வெளியாகாமல் இருப்பது அஜித் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

எனவே இனிமேலும்விடாமுயற்சிஅப்டேட் வரும் என்ற நம்பிக்கை கொஞ்சமும் இல்லை என அஜித் ரசிகர்கள் தெரிவித்து வரும் நிலையில் அவர்கள் லைகா நிறுவனத்தை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்பு மிகவும் தாமதமாகி வருவதாக கூறப்படும் நிலையில் குறைந்தபட்சம் ஒரு அப்டேட் கூட இல்லை என்பதுதான் அஜித் ரசிகர்களின் விரக்திக்கு காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.



 
இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின்படிவிடாமுயற்சிபடத்தின் அப்டேட் இல்லை என்றாலும் அஜித்தின் 63வது படம் குறித்த முக்கிய அறிவிப்பு இன்று வெளியாக இருப்பதாகவும் இந்த படத்தை தயாரிக்க இருக்கும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இன்று முக்கிய அப்டேட்டை வெளியிட இருப்பதாகவும் கூறப்படுகிறது.

அஜித்தின் 63வது படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க இருப்பதாக கூறப்பட்ட நிலையில்  இந்த படத்தின் டைட்டில் அறிவிப்பு தான் இன்று வெளியாகும் என்று கூறப்படுவதால் அஜித் ரசிகர்கள் குஷியில் இருக்கிறார்கள்.

விடாமுயற்சிஅப்டேட் தான் இல்லை என்ற நிலையில் குறைந்தபட்சம்அஜித் 63’ படத்தின் அறிவிப்பாவது இன்று வெளிவரும் என்ற எதிர்பார்ப்பில் இருக்கும் அஜித் ரசிகர்களுக்கு இன்னொரு ஏமாற்றம் கிடைக்குமா? அல்லது இன்ப அதிர்ச்சி கிடைக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

 

Advertisement

Advertisement