• May 04 2024

ஆள் அடையாளமே தெரியாமல் மாறிய அஜித் பட நடிகை... இப்போது இவர் இந்தத் தொழிலைத்தான் செய்கிறாராம்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பல நடிகைகள் காலத்திற்கு காலம் அறிமுகமாகிய வண்ணம் தான் இருக்கின்றார்கள். அதில் ஒரு சில நடிகைகள் மட்டும் எத்தனை காலமானாலும் ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாக வலம் வந்த வண்ணம் இருப்பார்கள். வேறு சில நடிகைகளோ ஒரு சில காரணங்களால் சினிமாவை விட்டு விலகி இருந்த இடம் தெரியாமல் மறைந்து விடுவார்கள்.


அவ்வாறான நடிகைகளில் ஒருவர் தான் வசுந்தரா தாஸ். இவர் ஹிந்தி நடிகையாக சினிமாத்துறையில் தன்னுடைய பயணத்தை ஆரம்பித்தவர். அதனைத் தொடர்ந்து பின்னர் 'ஹே ராம்' படத்தில் நடிகர் கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார்.


இதையடுத்து அஜித்துடன் இணைந்து 'சிட்டிசன்' என்ற படத்திலும் நடித்திருக்கின்றார். இவை தவிர மேலும் பல படங்களில் நடித்து கொடிக்கட்டி பறந்து வந்தார். இருப்பினும் பின்னர் ஒரு சில காரணங்களால் சினிமாவில் இருந்து விலகி விட்டார்.


இந்நிலையில் இவர் குறித்த தகவல் ஒன்று தற்போது வெளியாகி இருக்கின்றது. அதாவது பின்னணி பாடகியாகவும் நடிகையாகவும் இருந்து வந்த நடிகை வசுந்தரா தாஸ் தற்போது ஒருசில கச்சேரிகளில் கலந்து கொண்டு பாடி வருகிறாராம். அதுமட்டுமல்லாது சமூக விழிப்புணர்ச்சி நிகழ்ச்சிகளுக்கு சென்று பேசியும் வருகிறார். 


அந்தவகையில் சமீபத்தில் அவர் எடுத்த புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

Advertisement

Advertisement

Advertisement