• May 01 2024

‘துருவ நட்சத்திரம்’ படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் காட்சிகள் நீக்கம் - காரணம் இது தானா?

Jo / 9 months ago

Advertisement

Listen News!

இயக்குநர் கௌதம் மேனன் படங்களுக்கு ரசிகர்களிடம் எப்போதுமே தனி வரவேற்பு கிடைக்கும்.

கடைசியாக இவரது இயக்கத்தில் சிம்பு நடித்த வெந்து தணிந்தது காடு திரைப்படம் வெளியாகி இருந்தது, ரசிகர்களின் பேராதரவையும் பெற்றிருந்தது.

அதேபோல் கௌதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்த துருவ நட்சத்திரம் படத்தை ரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பார்த்தார்கள், ஆனால் படம் வெளியாவதற்கு தாமதம் ஆகிக் கொண்டே இருக்கிறது.

இந்த படத்தில் விக்ரமை தாண்டி ரிது வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ், பார்த்திபன், சிம்ரன் உள்பட பலர் நடிக்க ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.

ஐஸ்வர்யா ராஜேஷ் வைத்து படத்தின் போஸ்டர் எல்லாம் வெளியான நிலையில் தற்போது ஒரு ஷாக்கிங் நியூஸ் வந்துள்ளது.

அதாவது கதையில் மாற்றம் செய்திருப்பதால் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் காட்சிகள் படத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 


Advertisement

Advertisement

Advertisement