• May 06 2024

ஒரே சிரிப்புத் தான்.. ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த 'சொப்பன சுந்தரி'.. படம் எப்படி இருக்கு..? ரசிகர்களின் ட்விட்டர் விமர்சனம்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

'லாக்கப்' பட இயக்குநர் எஸ்.ஜி.சார்லஸின் தற்போது இயக்கியுள்ள திரைப்படம் 'சொப்பன சுந்தரி'. இதில், ஐஸ்வர்யா ராஜேஷுடன் இணைந்து தீபா, லக்ஷமி பிரியா, மைம் கோபி, ரெடின் கிங்ஸ்லி, சுனில் ரெட்டி என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.


இந்நிலையில், சொப்பன சுந்தரி திரைப்படமானது புத்தாண்டு தினமான இன்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி உள்ளது. அதாவது குறிப்பாக இப்படம் உலகமெங்கும் 600-இற்கும் மேற்பட்ட திரைகளில் திரையிடப்பட்டு உள்ளது. படம் பார்த்த ரசிகர்கள் பலரும் இப்படம் குறித்த விமர்சனங்களை தமது ட்விட்டரில் வெளியிட்ட வண்ணமே இருக்கின்றனர்.

அந்தவகையில் நெட்டிசன் ஒருவர் "சொப்பன சுந்தரி அருமையான படம். எனக்கு மிகவும் பிடித்திருந்தது. எப்படி இதுபோன்று தொடர்ச்சியாக சிறந்த கதையம்சம் கொண்ட படங்களாக நீங்கள் தேர்ந்தெடுத்து நடிக்கிறீர்கள்?" என வியப்புடன் கேள்வி எழுப்பி, ஐஸ்வர்யா ராஜேஷுக்கு பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார்.


அதேபோன்று இன்றோ பதிவில் "ஐஸ்வர்யா ராஜேஷின் ஸ்கிரிப்ட் தேர்வை பாராட்ட வேண்டும். கார யார் வச்சிருக்கா அல்லது கார் யாருடையது என்கிற சிம்பிளான ஒன்லைன் ஸ்டோரி நன்றாக கனெக்ட் ஆகி உள்ளது. ஐஸ்வர்யா ராஜேஷ், லட்சுமிபிரியா மற்றும் கருணாகரன் ஆகியோர் நேர்த்தியாக நடித்துள்ளனர்" என அவர்களை மனதாரப் பாராட்டி உள்ளார்.


இன்னொரு நெட்டிசன் "சில நகைச்சுவையான கதாபாத்திரங்களை வைத்து வேடிக்கையானவற்றை செய்யும் டைம்பாஸ் காமெடி படமாக சொப்பன சுந்தரி உள்ளது. முதல் பாதி பிடித்திருந்தது. இரண்டாம் பாதி வழக்கமான கதைக்குள் கொண்டுவர முயற்சித்தது. வாக்குவாதம் செய்யும் காட்சி மற்றும் கிட்னி காமெடி காட்சி ஆகியவை படத்திற்கு மிகப்பெரிய ஹைலைட். மொத்தத்தில் மகிழ்ச்சியான திரைப்படம்" பதிவிட்டு இருக்கின்றார்.


மேலும் மற்றோரு நபர் கூறுகையில் "சொப்பன சுந்தரி வேடிக்கையான டார்க் காமெடி திரைப்படம். நிறைய நகைச்சுவை காட்சிகள் உள்ளன. ஐஸ்வர்யா ராஜேஷ், லட்சுமி பிரியா மற்றும் தீபா படத்தை முன்னெடுத்து சென்றுள்ளனர். இதுதவிர நிறைய சப்போர்டிங் கேரக்டர்களும் உள்ளன. காமெடி, திரில்லர் மற்றும் பெண்கள் மேம்பாடு ஆகியவற்றை கலந்து கொடுத்துள்ளார் இயக்குனர் எஸ்.ஜி.சார்லஸ். மொத்தத்தில் டைம் பாஸ் படமாக சொப்பன சுந்தரி உள்ளது" எனக் குறிப்பிட்டுள்ளார்.


எனவே இதன் வாயிலாக 'சொப்பன சுந்தரி' படத்திற்கு பல பாசிட்டிவ் கமெண்டுகள் குவிந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement